முந்தய பக்கம்

தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

2 hours before
தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஆக.20-தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் அமைப்பு சார்பில் வட்டார நிர்வாகிகள் எம் சண்முகம் டிஆர்பி ஜானகி மற்றும் ரோஜா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 243 ஐ ரத்து செய்திட வேண்டும். ஆசிரி

யர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். டெட் ஒன்று மற்றும் இரண்டாம் தாள்கள் தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாக குறைத்து, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர் ஜெக நாதன், வட்டார நிர்வாகிகள் கிளாரா, ராஜேஸ்வரி, செந்தில்குமார், தாரா பேகம், பன்னீர்செல்வம், ஜான் பீட்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram