4 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு
24 Mar 2026, 3:23 pm
<p><strong>4 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு</strong></p>
<p>ராணிப்பேட்டை, மார்ச் 24- ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவை யான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தார். ஆற்காடு வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை மையக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 4,608 இயந்திரங்கள் (வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் அந்தந்த தொகுதிகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டன. இவை பலத்த பாதுகாப்புடன் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய தொகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட இருப்பு அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 24 மணி நேரக் கண்காணிப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளன.</p>
