முந்தய பக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு

21 Dec 2025, 3:21 pm
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு
<p>திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹென்றி பீட்டர், வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியின் மேற்பார்வையாளர் வி. சரவணன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram