தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் வழிமுறையை கைவிட மின் ஊழியர்கள் வலியுறுத்தல்

12 Nov 2025, 3:20 pm
ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும்  வழிமுறையை கைவிட மின் ஊழியர்கள் வலியுறுத்தல்
<p><strong>ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும்&nbsp; வழிமுறையை கைவிட மின் ஊழியர்கள் வலியுறுத்தல்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, நவ.12 - தமிழ்நாடு மின் வாரியத்தில் 60,000 காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாமல் (மேன் பவர் கார்ப்பரேஷன்) ஒப்பந்ததாரரின் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் வழிகாட்டி நெறிகளை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிந்து 23 மாதங்கள் கடந்த பிறகும் ஊதிய உயர்வு கிடைக்குமா? இல்லையா? என்ற நிலைக்கு தீர்வு காண வேண்டும். &nbsp;ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். கிளாஸ்-I, II உட்பட அனைவருக்கும் பிரித்தாளும் முறையை கைவிட்டு ஒன்றாக வழங்க வேண்டும். மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க ஒரு லட்சம் கோடிகளை கொடுத்து நிர்பந்தப்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மாநில அரசின் கீழ் மின் வாரியங்களை செயல்படுத்த நிதி உதவி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் செவ்வாயன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடந்தது. &nbsp;இதே போன்று மதிய உணவு இடைவேளையின் போது மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த வாயிற் கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நடராஜன், வட்டச் செயலாளர் பழனியாண்டி, எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவசெல்வம், இன்ஜினியர் சங்க திருச்சி மண்டலச் செயலாளர் நரசிம்மன், வட்டச் செயலாளர் சங்கர் கணேஷ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்டத் தலைவர் ஆலயமணி, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மாநிலச் செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செந்தில் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.