தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 4:05 pm
மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன.7- மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ திரும்பப் &nbsp;பெறக் கோரி திருப்பூர் மேற் பார்வைப் பொறியாளர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு மின் &nbsp;ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் புதனன்று கண்டன &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. &nbsp;தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, திருப்பூர் திட்ட கிளைத் தலைவர் கே.மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், மின்சார சட்டத்திருத்த மசோதா 2025ஐ திரும்பப்பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் தனியார் மயத்தை அனு மதிக்க கூடாது. 01.12.2023 ல் வழங்க வேண் டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண் டும். காலிப்பணியிடங்களை உடனடியாக &nbsp;நிரப்ப வேண்டும். கேங்மேன் பணியாளர் களை கள உதவியாளராக பதவி மாற்றம் செய்து, 6 சதம் ஊதிய உயர்வு நிலுவை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பணி யாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை அடை யாளங்கண்டு வாரியமே நேரடியாக ரூ.764 தினக்கூலி வழங்க வேண்டும். பகுதி நேர பணி யாளர்களை அடையாளங்கண்டு பணி நிரந் தரம் செய்ய வேண்டும். கடந்த 2018 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தப்படி புதிய பதவிகள் அனுமதிக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. இதில், கோவை மண்டலச் செயலா ளர் டி.கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றி னார். திட்ட கிளைச் செயலாளர் மார்க்ஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முடி வில், ஜெ.ஜஸ்டின் திரவியம் நன்றி கூறி னார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.