ஊதிய உயர்வு கேட்டு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>ஊதிய உயர்வு வழங்கக் கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.17- ஊதிய உயர்வை உடன டியாக வழங்கக் கோரி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வா யன்று மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 2023 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வை உடனடியாக வழங்க கோரி செவ்வாயன்று ஒரு நாள் முழுவதும் அனைத்து தொழிலாளர்களும், பொறியாளர்களும் பேட்ச் அணிந்து பணிபு ரிந்தனர். மாலை திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் திட்ட தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கலைச்செல்வி, திட்டச் செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். திட்டப் பொருளா ளர் ஜஸ்டின் திரவியம் நன்றி கூறினார்.</p>
<p> </p>
