தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக மின் ஊழியர்கள் வலியுறுத்தல்

9 Oct 2026, 2:01 am
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக  மின் ஊழியர்கள் வலியுறுத்தல்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக மின் ஊழியர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, அக்.8-ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வியாழனன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்புகள் பொருத்தப்பட்டால், மின் நுகர்வோருக்கு மிகப்பெரிய சுமை ஏற்படும். மீட்டர் கட்டணம் உச்சபட்ச நேரம், மின் பயனிட்டிற்கான கூடுதல் கட்டணம் போன்றவற்றாலும், மின் துண்டிப்பு ஏற்பட்டால் அதற்கான கட்டணம் உள்ளிட்டவைகளால் பாதிப்புக்குள்ளாவர்கள். எதிர்காலத்தில் ஃப்ரிப்பேய்டு மீட்டராக மாற்றப்படும். பணம் இருந்தால் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். மின்வாரியத்தில் நிரந்தர தன்மை வாய்ந்த பணிகள் காலியாகும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும். எதிர்காலத்தில் விவசாய மின் இணைப்புகள், குடிசை மின் இணைப்புகள், சிறு-குறு தொழில்கள் என அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, மக்களை பாதிக்கும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வியாழனன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாவட்டப் பொருளாளர்ஆர்.திம்மராயன், கோட்டச் செயலாளர்கள் எம்.ஆறுமுகம் (தருமபுரி), கோவிந்தன் (பாலக்கோடு), மகாத்மா (அரூர்), கடத்தூர் கோட்டத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்ஆர்டி கோட்டத் தலைவர் ஆர்.பொன்னுதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை, கவுந்தப்பாடி, சித்தோடு, கஸ்பாபேட்டை உள்ளிட்ட 7 மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், சங்கத்தின்மாநிலச் செயலாளர் பி.ஸ்ரீதேவி தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன், மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.லோகநாதன், ஜி.கோகிலவாணி, வட்ட நிர்வாகிகள் ஆர்.காளிமுத்து, எஸ்.விஜயன், என்.ரத்தினகுமார், பி.காளிமுத்து, சுரேஷ்குமார், கலைச்செல்வி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மின் திட்ட அலுவலகத்திற்குட்பட்ட உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி மற்றும் வால்பாறையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.