முந்தய பக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்த திட்டம்

3 Dec 2025, 2:59 pm
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்த திட்டம்
<p><strong>கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்த திட்டம்</strong></p> <p>கடலூர், டிச.3- கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளடக்கிய மின்ஊழியர் மத்திய அமைப்பு விழுப்புரம் மண்டல குழு கூட்டம் மாநில துணைத் தலைவர் என்.தேசிங்கு தலைமையில் நடைபெற்றது. &nbsp;மண்டல குழு கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் துணைத் தலை வர் டி.வெங்கடாசலம், விழுப்புரம் மாவட்ட செய லாளர் எம். புருஷோத்தமன், விழுப்புரம் தலைவர் ஆர்.சேகர், மாவட்டச் செய லாளர் ஆர்.அருள், கடலூர் கிளையின் மாவட்டப் பொருளாளர் என்.கோவிந்தராசு, விழுப்புரம் கிளையின் பொருளாளர் ஜி.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டிசம்பர் 18 அன்று மின் ஊழியர்களின் கோரிக்கையை வலி யுறுத்தி சென்னை தலைமை அலுவலகம் முன்பு கண்டன இயக்கம் நடத்துவது, வேலைப் பளுவைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram