விருதுநகர் மேம்பாலத்தில் ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பம்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>விருதுநகர் மேம்பாலத்தில் ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பம்</strong></p>
<p>விருதுநகர், பிப்.10- விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதில் நாள்தோறும் ஏராளமான பேருந்து கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில் இரு புறமும் மின் கம்பங்கள் நடப்பட்டு, அதில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த மின் கம்பங்கள் அனைத்தும் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் அளிக் கப்பட்டது. மின்வாரியமோ, மின் கம்பங் களை விருதுநகர் நகராட்சி நிர்வாகம் செலவு செய்து மாற்றிட வேண்டுமென பதில் தந்துள்ளது. இந்த நிலையில், ஒரு மின் கம்பமா னது சாய்ந்த நிலையில் எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதனால், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மின் கம்பம் திடீரென உடைந்து விழுந்தால் பெரும் விபத்து அப்பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நடுவதோடு, துருப்பிடித்த நிலையில் உள்ள அனைத்து மின் கம்பங்க ளையும் மாற்றிட வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.</p>
