மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
3 Sept 2026, 12:57 am

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட தலைமை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை (செப்.1) அன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், மின்துறையை தனியார்மயமாக்கும் அறிவிப்பை கண்டித்து தலைவர் ஆர்.சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டச் செயலாளர்கள் கன்னியப்பன், வீரமுத்து மற்றும் எம் .புருஷோத்தமன், அருள், கண்ணன், பரிமளா, கோட்டச் செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தனியார் மயமாக்கல் அறிவிப்பை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.