தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

6 Feb 2026, 5:17 pm
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கோவை, பிப்.6- தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரி யும் கேங்மேன் பணியாளர்களை கள &nbsp;உதவியாளராக பதவி உயர்வு வழங்கக் கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பி னர் (சிஐடியு) வெள்ளியன்று கோவை யில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் பணி புரியும் &nbsp;கேங் மேன் தொழிலாளர்களை &nbsp;கள உதவி யாளர் ஆக்க வேண்டும் என கடந்த ஜன வரி &nbsp;7-8 ஆகிய தேதிகளில் சிஐடியு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடத் தப்பட்டது. அந்த காத்திருப்புப் போராட் டத்தின்போது சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொங் கல் முடிந்தவுடன் கேங்மேன் பணியா ளர்களின் கோரிக்கையை நிறைவேற்று வதாக &nbsp;மின்சார வாரியத் தலைவர் &nbsp;தெரி வித்ததன் அடிப்படையில் அந்த போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற் போது வரை பணியாளர்களுக்கு களப் பணியாளர் பதவி உயர்வு கொடுக்காத நிலையில், வெள்ளியன்று தமிழ்நாடு மின்வாரிய நிர்வாக இயக்குநரின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் &nbsp;ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவை டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு &nbsp;நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர கிளைத் தலைவர் ஆர்.காளிமுத்து தலைமை ஏற்றார். இதில், கோவை மாநகர கிளைச் செயலாளர் எம்.தண்டபாணி, பொருளா ளர் எஸ்.விஜயன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.லோகநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மாநில செய லாளர் டி.மணிகண்டன் நிறைவுரை யாற்றினார். கோவை தெற்கு வட்ட கிளை சார் பாக குனியமுத்தூரில் கே.சுந்தரவேல், நெகமத்தில் பி. காளிமுத்து, சோம னூரில் முகமது அலி ஆகியோர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்ட கிளைச் செயலாளர் என். ரத்தின குமார், மாநில செயற்குழு உறுப்பினர் டி.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கோவை வடக்கு மாவட்ட கிளை சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளைத் தலைவர் சுரேஷ், செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். &nbsp;மேற்கண்ட, கோரிக்கையை வலியு றுத்தி &nbsp;ஆப்லைன் ஒர்க் மட்டும் செய்வது &nbsp;என முடிவெடுத்து &nbsp;கடந்த 19ஆம் தேதி யிலிருந்து தற்போது வரை தொடர்ச்சி யாக ஆப்லைன் வேலை மட்டுமே கேங்மேன் பணியாளர்கள் செய்து வரு கின்றனர். தங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் கேங்மேன் பணியாளர்கள் மற் றும் நிரந்தர ஊழியர்கள் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலை வர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.