மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
27 Nov 2025, 3:11 pm
<p>தருமபுரி, நவ.27- மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார சட்டத்திருத்த மசோதா – 2025யை கைவிட வேண்டும். உத்தரபிரதேச மாநில மின்வாரிய ஊழி யர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தும், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை அமலாக்கம் செய்ததை எதிர்த்தும் மின்வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவல கம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்ளாயீஸ் பெடரேசன் திட்டத் தலைவர் அருள்நாதன் தலைமை வகித்தார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்டச் செயலா ளர் தீ.லெனின் மகேந்திரன், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சி.முருகன், மாவட்டச் செயலாளர் சிவரா மன், ஐக்கிய தொழிலாளர் பொறியாளர் சங்க துணை பொதுச்செயலாளர் ஏ.ஆறுமுகம், பொறியாளர் சங்க திட்டப் பொருளாளர் அருணகிரி, பொறியாளர் கழக தலைவர் செந்தில் முருகன், என்எல்ஒ திட்டத் தலை வர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
