மின்வாரிய பொறியாளர், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>மின்வாரிய பொறியாளர், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, பிப்.17- தமிழ்நாடு மின்வாரியத்தில், 1.12.23 இல் இருந்து பணிபுரியும் பொறியாளர் தொழிலாளர்கள், கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பிரிவு அலுவலகங்களில் செவ்வாய் அன்று ஒலி முழக்க போராட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்ஜினியர் சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், சிஐடியு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் சங்கங்கள் கலந்து கொண்டன. சிஐடியு திருச்சி மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், பாலசுப்பிரமணி, அழகேசன், சிவசெல்வம், பழனியாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடராஜன் நன்றி கூறினார். இதேபோன்று, கே.கே.நகர், வெள்ளனூர், மன்னார்புரம், துறையூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி கைலாசபுரம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
