மின்வாரிய பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டம்
27 Feb 2026, 5:32 pm
<p><strong>மின்வாரிய பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.27- ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர் கள் 2 ஆவது நாளாக போராட்டத் தில் ஈடுபட்டனர். மின்வாரிய பொறியாளர்க ளுக்கு 1.12.2023 முதல் வழங்க வேண் டிய ஊதிய உயர்வு முன்மொழிவு வரைவை 25.2.2026 அன்று மின் வாரியம் வழங்கியது. அதில் மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கும், பொறி யாளர்களுக்கும் ஊதிய உயர்வு இல்லை என முன்மொழிந்துள்ள னர். இதை திரும்பப்பெறக்கோரி யும், இதனை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவல கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப் பூர் மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக ஊத்துக்குளி கோட்ட செயற்பொறி யாளர் விஜயஈஸ்வரன் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்ஸ் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சதீஷ் சங்கர், ஜேம்ஸ் கென்னடி, ஜஸ்டின் திரவியம், சாமு வேல் ஜான்சன், சுரேஷ்குமார், சண் முகசுந்தரம், சீனிவாசன் மற்றும் பொறியாளர்கள் அலுவலர்கள், களப்பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் என 100க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். கோவை கோவை தலைமைப் பொறியா ளர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பு கோவை மண்டலச் செயலாளர் டி. கோபால கிருஷ்ணன் தலைமை ஏற்றார். இதில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் கண்ணாதுரை, ஆனந்த், பொறியா ளர் அமைப்பு மாநில துணைத்தலை வர் ரணதிவே, மதனகோபால், ஞான பிரகாசம், மகேந்திரன், கண்ணன், காளிமுத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நிறைவாக, மின்வா ரிய சம்மேளன இணைச்செயலா ளர் கந்தவேல் உரையாற்றினார்.</p>
