ஊதிய உயர்வு கேட்டு மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
26 Feb 2026, 5:09 pm
<p><strong>ஊதிய உயர்வு கேட்டு மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஈரோடு, பிப்.26- ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, மின்வாரிய பணியாளர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனை வருக்கும் ஒப்பந்தப்படி 1-12-2023 முதல் புதிய உதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால், மின்சார வாரியம் 2 வருடங்கள் கடந்த பின்பு, தொழிற்சங்கங்களிடம் புத னன்று ஊதிய உயர்வுக்கான ஆலோ சனை குறிப்பை வழங்கி, பேச்சு வார்த்தை நடத்தியது. அதில், பணித் தொகுதி I மற்றும் II இல் பணியாற்றும் அலுவலர்கள், பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறிப்பிடப் படாமல், தமிழ்நாடு அரசின் அனு மதிக்கு அனுப்பப்படும் என்று மட்டும் குறிப்பிட்டிருந்ததை தொழிற்சங்கங் கள் ஏற்க மறுத்து, அன்று மாலையே மின்வாரிய தலைமையகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி னர். தொடர்ந்து, தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்குழு முடிவின்படி பணித்தொகுதி I & II இல் பணியாற்றும் அலுவலர், பொறியாளர்கள் அனைவ ருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண் டும் என வலியுறுத்தி வியாழனன்று ஈரோடு மின்பகிர்மான வட்டம் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொறியாளர் கழகத்தின் நிர்வாகி வாசுதேவன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) தலைவர் ஜோதிமணி, பொறியாளர் கழகத்தின் செயலாளர் கவிதா, ஈரோடு மண்டலச் செயலாளர் சந்திரசேகரன், ஐக்கிய சங்கத்தின் செயலாளர் பிரபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அதேபோல் கோபிசெட்டி பாளையத்தில் பொறியாளர் சங்க செயலாளர் நல்லமுத்து தலைமை யில் ஆர்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி நீலகிரி மாவட்டம், குந்தா புனல் மின் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மின்வாரிய தொழி லாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில துணை பொதுச்செயலாளர் வே.ஜெய குமார் தலைமை வகித்தார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் முரளிதரன், பொறியாளர் சங்க செயலா ளர் மகேந்திரமணி, பொருளாளர் சிவச ரன், இணைச்செயலாளர் குணசிங், துணைத்தலைவர் தியாகராஜன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ராதா நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, பொறியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முனி ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா ளர் தீ.லெனின் மகேந்திரன், ஐக்கிய சங்க மாநில துணை பொதுச்செயலா ளர் ஆறுமுகம், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சிவராமன், எம்ளாயீஸ் பெட ரேசன் மாவட்டத் தலைவர் அருள் நாதன், பொறியாளர் யூனியன் மாவட் டச் செயலாளர் மாதேஷ், அம்பேத்கர் சங்க மாவட்டச் செயலாளர் மாதேசன், என்எல்ஒ மாவட்டச் செயலாளர் செல் வராஜ், பொறியாளர் கழக மாவட்ட நிர் வாகி சுரேஷ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். ஓய்வுபெற் றோர் மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி வாழ்த்திப் பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை டாடபாத் பகுதியில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோவை மாந கர், தெற்கு மற்றும் வடக்கு மின் வட்டம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு பவர் இன்ஜினியர் ஆர்கனை சேஷன் மாநில துணைப் பொதுச் சயலா ளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் ரனதிவே, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் கோவை மாநகர் செயலாளர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த அனைத்து மின் பொறியா ளர்கள், அலுவலர்கள் மற்றும் தொழிலா ளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர். திருப்பூர் திருப்பூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்பார்வை பொறியாளர் தி.சுமதி தலைமை வகித் தார். இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பி னர் மார்க்ஸ், எம்ப்ளாய் பெடரேஷன் மாநிலச் செயலாளர் சதீஷ் சங்கர், மத் திய அமைப்பின் திட்டத் தலைவர் மோகன் தாஸ், எம்ப்ளாய் பெடரேஷன் துணைத் தலைவர் சாமுவேல் ஜான்சன், ஜனதா தொழிலாளர் சங்கத்தின் கோவை மண்டலச் செயலாளர் சுரேஷ் குமார், பொறியாளர் அமைப்பின் செய லாளர் சண்முகசுந்தரம், ஐக்கிய சங்கத் தின் திருப்பூர் செயலாளர் சதாசிவம் மற்றும் பொறியாளர்கள் அலுவலர்கள் களப்பணியாளர்கள் நிர்வாகப் பணி யாளர்கள் திரளானோர் பங்கேற்றனர். அதேபோல் உடுமலைப்பேட்டை மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். சேலம் சேலம் மாவட்டம், உடையாப்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சேலம் மின் திட்ட தலைவர் கோ.குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சேலம் மின் திட்ட செயலாளர் வீ. ரகுபதி மற்றும் கூட்டுக் குழு சங்கங் களின் நிர்வாகிகள் விலக்கிப் பேசி னார்.</p>
