தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வாரிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு திருப்பூர், உடுமலையில் காத்திருப்பு போராட்டம்

11 Mar 2026, 4:32 pm
மின்வாரிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு திருப்பூர், உடுமலையில் காத்திருப்பு போராட்டம்
<p><strong>மின்வாரிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு திருப்பூர், உடுமலையில் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 11- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரி யும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கக் கோரி திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் புதனன்று அறவ ழிப் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் உடுமலையில் காத்திருப்புப் போராட்டம் &nbsp;நடைபெற்றது. திருப்பூர் திட்டத்தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத் தில், 2023ஆம் ஆண்டு டிச.1 ஆம் தேதி முதல் &nbsp;வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க &nbsp;வேண்டும். 26 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர் களை கள உதவியாளராக பதவி மாற்றம் மற்றும் கேங்மேன் உள்ளிட்டவர்களுக்கு 2019 &nbsp;ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 6% &nbsp;ஊதிய உயர்வு, வழங்க வேண்டும். ஒப்பந்த &nbsp;தொழிலாளர்களை அடையாளம் காண குழு &nbsp;அமைக்க வேண்டும். விடுபட்ட 1035 பகுதி &nbsp;நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய &nbsp;வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர், அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்ஸ், திட்ட பொருளாளர் ஜஸ்டின் திர வியம், துணைத் தலைவர் வீரன், கோபால் &nbsp;உள்ளிட்ட அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி &nbsp;கோட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட &nbsp;தொழிலாளர்கள் பங்கேற்றனர். உடுமலை: தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை &nbsp;செய் யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க &nbsp;வேண்டிய ஊதிய உயர்வை வழங்கக் கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் உடுமலை மின் வாரிய அலுவலகத்தின் &nbsp;முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். &nbsp;இந்த போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய &nbsp;அமைப்பின் உடுமலை திட்டச்செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். திட்டத்த லைவர் ஜெகானந்தா, பொருளாளர் பால சுப்ரமணியன், தமிழ்நாடு மின்சாரத் தொழி லாளர் சம்மேளனத்தின் உடுமலை தலைவர் தண்டபாணி, செயலாளர் மணிகண்டன் &nbsp;பொருளாளர் நாராயணசாமி உள்ளிட்ட மின் வாரிய அலுவலக பொறியாளர்கள் மற்றும் &nbsp; தொழிலாளர்கள் &nbsp;திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.