மின் இணைப்பு தராமல் தாமதித்த மின்வாரியம்: கூடுதல் கட்டணம் செலுத்திய திருப்பூர் மேயர்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>மின் இணைப்பு தராமல் தாமதித்த மின்வாரியம்: கூடுதல் கட்டணம் செலுத்திய திருப்பூர் மேயர்</strong></p>
<p>திருப்பூர், டிச.3- திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமாரின் வீடு புதுப்பிப்பு பணிக்கு தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்தும் மின் இணைப்புத் தரப்படவில்லை. இந்நிலையில் வீட்டு மின் இணைப்பில் மின்சாரத்தை பயன் படுத்தியதற்காக கூடுதல் கட்டணம் விதிக்கப் பட்டது. திருப்பூர் தெற்கு கே.என்.பி.சுப்பிரமணிய நகரில் மேயர் தினேஷ்குமார் வீடு புதுப்பிக் கும் பணியை மேற்கொண்டிருக்கிறார். அதற் காக தனி மின் இணைப்புக் கேட்டு கடந்த அக் டோபர் 8ஆம் தேதி விண்ணப்பித்திருக்கிறார். டிமாண்ட் கோரிய நிலையில் அதற்குரிய கட்டணம் ரூ.16,935-ஐயும் மேயர் தரப்பில் செலுத்தி விட்டனர். எனினும் தற்காலிக மின் இணைப்புத் தரப்படவில்லை. இந்த நிலையில் வீடு புதுப்பிக்கும் பணி ஏற்கெ னவே இருக்கும் வீட்டு மின் இணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டணத்தை விடக் கூடுதலாக மின் கட்ட ணம் வந்த நிலையில் கூடுதல் லெவியாக இந்த தொகையை மேயர் தரப்பினர் செலுத்தி யுள்ளனர். இது குறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சுமதி கூறுகையில், அக்டோபர் 8ஆம் தேதியே மேயர் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தி இருக்கிறார். ஆனால் மின் வாரிய தரப்பில் தற்காலிக மின் இணைப்புத் தரா மல் தாமதம் செய்துள்ளனர். ஒரு வார காலத் தில் மின் இணைப்பு கொடுத்திருக்க வேண் டும். தவறு மின்வாரியத்தரப்பில் தான் உள் ளது. எனவே வீட்டு இணைப்பில் செலுத்த வேண்டிய கட்டணத்தில் கூடுதல் கட்ட ணத்தை செலுத்தியிருக்கிறார் என்று தெரி வித்தார். மேயர் விளக்கம் இதுகுறித்து மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது, வீடு புதுப்பிக்கும் பணி மேற் கொண்டுள்ளேன். அதற்காக கடந்த அக் டோபர் மாதம் மின் இணைப்புக் கேட்டு மின் வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். அவர் கள் 8ஆம் தேதி டிமாண்ட் கோரியிருந்தனர். நான் அக்டோபர் 13ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்பு தரவில்லை. இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு உரிய வித்தி யாச தொகையை செலுத்தும்படி கூறினர். அதைத்தான் நான் செலுத்தினேன். அபரா தம் விதிக்கவில்லை. ஆனால் தினமலர் நாளி தழ் காழ்ப்புணர்ச்சியுடன், என் மீது வன்மத் துடன் இது போல் செய்தி வெளியிட்டுள் ளது, என்றார்.</p>
