முந்தய பக்கம்

மின்வாரிய கோவை மண்டல வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

9 Feb 2026, 3:02 pm
மின்வாரிய கோவை மண்டல வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
<p><strong>மின்வாரிய கோவை மண்டல வேலை நிறுத்த ஆயத்த மாநாடு</strong></p> <p>கோவை, பிப். 9- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோ தக் கொள்கைகளை கண்டித்து பிப்ர வரி 12-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழு விய பொது வேலை நிறுத்தத்தை முன் னிட்டு, தமிழ்நாடு மின்வாரிய கோவை மண்டல அளவிலான ஆயத்த மாநாடு டாடாபாத் பகுதியில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை உடனடியாக கைவிட வேண் டும். விவசாயிகளுக்கு எதிரான விதை கள் சட்டம் 2025 மற்றும் மின்சார திருத்தச் சட்டம் 2025 ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும். எல்.ஐ.சி, ரயில்வே, &nbsp;விமான நிலையங்கள் மற்றும் சுரங் கங்கள் போன்ற பொதுத்துறை நிறுவ னங்களை தனியார்மயமாக்கும் முயற் சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெற்றிபெறச் செய்யும் வகையிலான பல்வேறு வடி வங்களில் இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு வின் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திங்களன்று நடைபெற்றது. டி.என்.இ.பி.இ.எப் மாநிலத் தலைவர் ஜே.ஏ. பாஸ்டின்ராஜ் தலைமை ஏற்றார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் &nbsp;மாநிலச் செயலாளர் டி. மணிகண்டன் வரவேற்றார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, யு.டி.யு.சி மாவட்டச் செயலாளர் காதர் இப்ராஹிம், ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக, டி.என்.இ. டபுள்யூ.எப் (TNEWF) மாநில துணைத் தலைவர் கே.செல்வராஜ் நன்றி கூறி னார். இப்போராட்டத்தில் கோவை மண் டலத்தை சேர்ந்த திரளான மின்வா ரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram