தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருமூர்த்தி அணையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆய்வு

7 Jan 2026, 4:05 pm
திருமூர்த்தி அணையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆய்வு
<p><strong>திருமூர்த்தி அணையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆய்வு</strong></p> <p>உடுமலை,ஜன.7- திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி செயல் படுத்துவது தொடர்பாக புத னன்று ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்று லாத் தலமாக திருமூர்த்தி மலை உள்ளது. திருமூர்த்தி மலை சுற்றுலாப் பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணை போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதே போல் இங்கு செயல்பட்டு வந்த படகு இல்லம் &nbsp;பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதனன்று படகு இல்லம் மீண்டும் செயல்படுத்துவது தொடர் பாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் &nbsp;குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தின் மண்டல மேலாளர் யுவராஜ் உள்ளிட்ட சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற் கொண்டனர். இதைதொடர்ந்து பொதுப்ப ணித்துறை அலுவலகத்தில் கூட்டம் நடை பெற்றது. இதில், படகு இல்லம் செயல்ப டுத்தும் போது தொடர்புடைய துறையிட மிருந்து பெறவேண்டிய அனுமதிகள், படகு இல்லத்தின் மூலம் பெறப்படும் வருவாயில் வருவாய் பகிர்வு மேற்கொள்ளுதல், படகு &nbsp;இல்ல செயல்பாட்டில் திருமூர்த்தி மலை பகு தியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வேலை &nbsp;வாய்ப்பு அளித்தல் உள்ளிட்டவைகள் குறித்துவிவாதிக்கப்பட்டன. அதன்பின் படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக ரூ.80 லட்சம் &nbsp;திட்ட கருத்துரு உருவாக்கப்பட்டு, சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், பேரூ ராட்சி துணைத் தலைவர் செல்வம், தளி பேரூ ராட்சி செயல் அலுவலர் ஜீவா உள்ளிட்ட பலர் &nbsp;கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.