முந்தய பக்கம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் போராட்டம்

11 Mar 2026, 4:32 pm
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் போராட்டம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் போராட்டம்

ஊதிய உயர்வை வழங்கக் கோரியும், 26 மாத நிலுவைத் தொகையை வழங்கிடக் கோரியும், கேங்மேன் பணியாளர்களை உதவியாளராகப் பதவி உயர்வு வழங்கக் கோரியும் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் வட்ட மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தொழிலாளர் சம்மேளனம், பாட்டாளி தொழிற்சங்கம், டேன்ஜெட்கோ யூனியன், தமிழ்நாடு பவர் இன்ஜினியர் ஆர்கனைசேஷன் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் கே.சீனிவாசன், கே.விஜயகுமார், எஸ்.வெங்கடேசன், ஆர்.ஏழுமலை உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு, தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய பாட்டாளி தொழிற்சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சி ஐ டி யு மாநில துணைப் பொதுச் செயலாளர் டி. பழனிவேல் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர்சம்மேளனம் சங்கத்தின் மாநில இணை செயலாளர் ஆர்.ரவிசங்கர்,  மத்திய அமைப்பு சிஐடியு கடலூர் மாவட்ட செயலாளர் என். தேசிங்கு பாட்டாளி தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ஆர். வெங்கட்டரமணன், மற்றும் சிஐடியு மாவட்ட பொருளாளர் . என்கோவிந்தராஜ் மற்றும் ரவிச்சந்திரன் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம்  மாவட்ட தலைவர் ஆர்.ரமேஷ், திட்ட இணைச்செயலாளர் என்.பாலமுருகன், பாட்டாளி தொழிற்சங்கத்தின் விருத்தாசலம் கோட்டசெயலாளர் என்மு ரளி ,  கடலூர்  செயலாளர் சுப்பரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் கே. காங்கேயன், பாலாஜி, சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram