மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
7 Feb 2026, 5:37 pm
<p><strong>மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.7- மின்வாரியத்தில் வேலை செய்யும் கேங் மேன் பணியாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளை, மின்வாரியத் தலைவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளை யம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் கிளைச் செயலாளர் பி.மார்க்ஸ் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.</p>
