ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>பெரம்பலூர், பிப்.17- மின்வாரிய ஊழியர்களுக்கு, பொறியாளர்களுக்கு, அலுவலர்களுக்கு 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். அதை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கைவிட கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் பெரம்பலூர் உபகோட்ட அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை, திருச்சி மண்டலச் செயலாளர் அகஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட துணைத் தலைவர் பன்னீர் செல்வம், கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில்,சங்க நிர்வாகிகள் உட்பட பலர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.</p>
