முந்தய பக்கம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 4:05 pm
 மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>&nbsp;மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்&nbsp;</strong></p> <p>மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2025 திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளையின் சார்பில் ஐசிஎப் &nbsp;மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தலைவர் கதிரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், மாநில துணைத்தலைவர் சலீம் குமார் &nbsp;மாநில நிர்வாகி சாலட், நிர்வாகிகள் சந்திரசேகர், திருநீர் செல்வம், கே.வெங்கட்டையா, ஜெயக்குமார், அந்தோணி, மரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு &nbsp;கிளை சார்பில் திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு துணைத் தலைவர் ஜி.குப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.அருள்செல்வன், மாநில செயலாளர் ஆர்.ராஜேஷ்கண்ணா, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.தசரதன், கிளை பொருளாளர் கே.பிரகாஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram