ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருநெல்வேலி, பிப்.18- 1-12-2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை மின் பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க கோரி பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நெல்லை மாவட்ட திட்ட தலைவர் பி. நாகை யன் தலைமை தாங்கினார், சங்கத்தின் திட்ட துணைத் தலைவர் எஸ். பூலுடையார் தொடங்கி வைத்து பேசினார், கோரிக்கைக ளை விளக்கி துணைச் செயலா ளர் தளபதி, மத்திய கோட்ட செய லாளர் மந்திரமூர்த்தி, கல்லி டைக்குறிச்சி கோட்டச் செயலா ளர் முருகேசன், வள்ளியூர் கோட்ட செயலாளர் வேல்முருகன், கிராமபுற கோட்ட செயலாளர் அய்யாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் சுவாமிதாசன், சங்கத்தின் திட்டச் செயலாளர் து.கந்தசாமி உட்பட பலர் பேசினர். மத்திய கோட்டத் தலை வர் ஜார்ஜ் நன்றி கூறினார், ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்காசி தென்காசி மாவட்டம், தென் காசி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்க ளுக்கு 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை ஊழியர்கள், அதிகாரிகள், மற்றும் பொறியாளர்கள், அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அயுப்கான் துவக்க உரை யாற்றினார். துளசிமணி, கனசேக ரன், ஹைதர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவராஜ், சேவியர் அந்தோணி பேசினர். சி ஐ டி யு மாவட்ட செயலாளர் மணி கண்டன் நிறைவுரை ஆற்றினார். நெல்லை மண்டல செயலாளர் எஸ்.வண்ணமுத்து நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எஸ்.இளையராஜா உட்பட, பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
