தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 4:05 pm
மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>ஈரோடு, ஜன.7- காலிப்பணியிடங்களை நிரப்ப &nbsp;வேண்டும் உள்ளிட்ட மின் ஊழியர் களின் தீர்க்கப்படாத கோரிக்கை களை, வாக்குறுதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மின்சார சட்ட திருத்த மசோதா &ndash; &nbsp;2025யை திரும்பப்பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் தனியார் மயத்தை அனுமதிக்கக்கூ டாது. 2023 டிசம்பர் முதல் வழங்க &nbsp;வேண்டிய ஊதிய உயர்வை உடன டியாக வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக ரூ.764 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் துணைத்தலைவர் வி.தமிழரசன் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் பி.ஸ்ரீதேவி, கிளைத்தலைவர் சி.ஜோதிமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைப் பொருளாளர் எம்.பிரகாஷ் தலைமை வகித்தார். கிளைத் தலை வர் பி.சேகர், செயலாளர் கே.பாண் டியன் உட்பட பலர் கலந்து கொண் டனர். தருமபுரி தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு, மின் ஊழியர் சங்க &nbsp;கோட்டச் செயலாளர் எம்.ஆறுமு கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் &nbsp;மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாவட் டச் செயலாளர் தீ.லெனின் மகேந்தி ரன், பொருளாளர் ஆர்.திம்மரா யன், துணைத்தலைவர்கள் பி. சிவக்குமார், ஆர்.பொன்னுதுரை, இணைச்செயலாளர்கள் எம்.ஆறு முகம், கே.ஜெகநாதன், எ.கோவிந் தன், ஆர்.முருகேசன், மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.விஜயன், பொறியாளர் அமைப்பின் மாவட் டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி உட் பட திரளானோர் கலந்து கொண் டனர். சேலம் சேலம் மாவட்டம், உடையா பட்டி பகுதியிலுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மின் திட்டத் தலைவர் கோ.குமார் தலைமை வகித்தார். செயலாளர் வீ.ரகுபதி கோரிக்கைகளை விளக் கிப் பேசினார். இதில் பொதுக்கட்டு மான வட்டச் செயலாளர் வெங்கடே சன், தலைவர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மின் திட்டப் பொருளாளர் ர. கந்தசாமி நன்றி கூறினார். கோவை கோவை. டாடாபாத் பகுதியி லுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநகரத் தலைவர் ஆர்.காளி முத்து தலைமை வகித்தார். மாநிலச் &nbsp;செயலாளர் டி.மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. லோகநாதன், மாநகரச் செயலா ளர் எம்.தண்டபாணி, பொருளாளர் எஸ்.விஜயன், துணைத்தலைவர் வி.மதுசூதனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. கோகிலவாணி நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.