தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குழந்தைகள் பாடசாலை அருகே ஆபத்தை ஏற்படுத்தும் மின் கம்பி

11 Mar 2026, 4:32 pm
குழந்தைகள் பாடசாலை அருகே  ஆபத்தை ஏற்படுத்தும் மின் கம்பி
<p><strong>குழந்தைகள் பாடசாலை அருகே &nbsp;ஆபத்தை ஏற்படுத்தும் மின் கம்பி</strong></p> <p>திருப்பூர், மார்ச் 11- திருப்பூர் நகரில் விபத்தை ஏற்படுத்தும் வகை யில் குழந்தைகள் பாட சாலை அருகில் அமைந் துள்ள மின் கம்பியை மாற்றித் &nbsp;தரும்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரி யுள்ளனர். &nbsp;இந்திய ஜனநாயக வாலி பர் சங்கக் குமரன் காலனி கிளை சார்பில் பாண்டியன் நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதனன்று மனு அளித்தனர். திருப்பூர் மாந கராட்சி 1 ஆவது வார்டுக்குட்பட குமரன் காலனியில் பள்ளிவாசல் உள்ளது. இதன் மேல்தளத்தில் இஸ்லாமிய பாடசாலையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளிவாசலுக்கு முன்பு மின் கம்பிகள் &nbsp;பாடசாலை ஜன்னலுக்கு மிக அருகில் செல்கி றது. மழை காலங்களில் மின் கம்பி காற்றில் &nbsp;அசைந்து இதன் சுவரில் உரசும் சூழல் உள் ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் மின் பாதையை மாற்றித் தர வேண்டும். இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் &nbsp;தெரிவித்ததால் இதன் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலகத்திற்கும் பரிந்துரை செய்துள் ளனர். இதையடுத்து சட்டமன்ற தொகுதி நிதி யில் இருந்து மின் கம்பியை மாற்றி தருவ தாகத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் எந்த &nbsp;நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம் பாவிதம் நிகழும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். &nbsp;இம்மனுவைப் பெற்று கொண்ட மின் &nbsp;பொறியாளர், அந்த இடத்தை நேரில் பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் &nbsp;சந்தோஷ், கிளைச் செயலாளர் முகமது தெளபிக், கிளைத் தலைவர் முகமது ரபிக், &nbsp;துணைச் செயலாளர் அஜித் உள்ளிட்ட பலர் &nbsp;பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.