முந்தய பக்கம்

பேருந்து மீது விழுந்த மின்கம்பம்

13 Dec 2025, 5:13 pm
பேருந்து மீது விழுந்த மின்கம்பம்
<p><strong>பேருந்து மீது விழுந்த மின்கம்பம்</strong></p> <p>உதகை, டிச.13- உதகை அருகே அரசு பேருந்து மீது மின்கம்பம் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து பெந்தட்டி கிராமத்திற்கு நாள்தோறும் அரசு பேருந்து இயக்கப் படுகிறது. எப்பநாடு, கொரனூர், கெங்கமுடி பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த பேருந்தை பயன்ப டுத்தி வருகின்றனர். இப்பகுதிக்கு இந்த ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நி லையில், வெள்ளியன்று 40 பயணிகளுடன் பெந்தட்டி யிலிருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுநர் ஜெயபிரகாஷ், நடத்துநர் ரவிக் குமார் ஆகியோர் இயக்கியுள்ளனர். பாரஸ்ட் கேட் &nbsp;பகுதியில் எதிரில் லாரி வந்ததால், லாரிக்கு வழிவிட்டு &nbsp;ஒதுங்கி நின்றது. அப்போது லாரியும் பேருந்தும் செல்ல &nbsp;முடியாத நிலை ஏற்பட்டதால், லாரி சாலையை விட்டு &nbsp;சற்று கீழே இறங்கியது. அப்போது எதிர்பாராத வித மாக லாரி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது உரசி மின்கம்பம் சாய்ந்தது. அதே சமயம், எதிரில் இருந்த &nbsp;மற்றொரு மின்கம்பம் அரசு பேருந்து மீது விழுந்தது. இதனால் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. இத னைக்கண்ட பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கினர். அப்போது மின் கம்பி அறுந்துவிட்டதால், பேருந்தின் மீது மின்சாரம் பாயாமல் பயணிகள் உயிர் தப்பினர். உடனடியாக இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற் றும் ஊழியர்கள் மின் ஒயர்களை சரி செய்தனர். அதன் பின் அங்கிருந்து அரசு பேருந்து உதகை நோக்கி சென்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram