பைக்காராவில் மின் மோட்டார் மூலம் படகுகள் இயக்கம்
5 Apr 2026, 5:18 pm
<p><strong>பைக்காராவில் மின் மோட்டார் மூலம் படகுகள் இயக்கம்</strong></p>
<p>உதகை, ஏப்.5- பைக்காரா படகு இல்லத்திலி ருந்து பெட்ரோல் மோட்டார் படகு கள் இயக்குவதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தற்போது மின் மோட்டார் மூலம் படகுகள் இயக்கப்படுவதற்கு சுற்றுலாப் பய ணிகள் வரவேற்பு தெரிவித்துள்ள னர். சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரிக்கு ஆண்டுக்கு 30 லட்சத் திற்கும் அதிகமான சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தி லுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்க ளில் ஒன்றாக உள்ள பைக்காரா படகு இல்லம், அடர்ந்த வனப்பகுதி யின் நடுவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் படகு சவாரி செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு பெட்ரோல் மோட்டார் மூலம் படகுகள் இயக்கப் படுவதால் காற்று, நீர் மாசுபடுவ தாக கோவையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசா ரித்த நீதிபதிகள் பைக்காரா படகு இல்லத்தில் பெட்ரோல் மோட்டார் படகுகளை இயக்க தடை விதித்த னர். இதையடுத்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் பைக்காராவில் படகு சவாரிகள் நிறுத்தப்பட்டு படகு இல்லம் மூடப்பட்டது. இத னால் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் ஏமாற்றமடைந்தனர். இதைய டுத்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், படகுகளில் பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய மின்மோட் டார்கள் பொருத்தி இயக்க சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ளியன்று ரூ.21 லட்சம் மதிப்பி லான மின்மோட்டார் பொருத்தப் பட்ட 3 படகுகளின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 8 எச்.பி., 12 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு சத்தம் அதிக அள வில் இல்லாமல் படகுகள் இயக்கப் பட்டன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் ஓடும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனியன்று படகு இல்லம் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய அனு மதிக்கப்பட்டனர். மின்மோட்டார் படகுகளில் பயணம் செய்த சுற்று லாப் பயணிகள் அதிக சத்தமின்றி, புகை மற்றும் மாசில்லாமல் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்த னர். அதிக வேகம் இல்லாமல் மெது வாக செல்லும் படகு மூலம் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப் பது புதிய அனுபவமாக இருந்த தால் வரவேற்பு தெரிவித்தனர். 30 படகுகள் இயங்கிய இடத்தில் தற் போது 3 மின்மோட்டார் படகுகளே இயக்கப்படுவதால், வரும் நாட்க ளில் கூடுதலாக மின்மோட்டார் படகுகள் இயக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
