மருதமலை கோவிலில் மின்தூக்கி திறப்பு
1 Feb 2026, 3:51 pm
<p><strong>மருதமலை கோவிலில் மின்தூக்கி திறப்பு</strong></p>
<p>கோவை, பிப்.1- மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடி மதிப் பீட்டில் அமைக்கப்பட்ட மின் தூக்கியை அமைச்சர் சேகர் பாபு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவி லில் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய வசதியாக ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் 2 அடுக்கு மின் தூக்கி அமைக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு, ஞாயிறன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு மின்தூக்கியின் செயல்பாட்டை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதன்பின் மின் தூக்கியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ் வில், அறநிலையத்துறை ஆணையர் ஶ்ரீதர், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
