வேலூரில் மின்னொளி கையுந்து பந்து போட்டி
21 Jan 2026, 3:58 pm
<p><strong>வேலூரில் மின்னொளி கையுந்து பந்து போட்டி</strong></p>
<p> வேலூர், ஜன. 21- வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் கையுந்து பந்து சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் மின்னொளி கையுந்து பந்து போட்டி, காவல்துறை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்ற இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் வேலூர் பெருமுகை அணி முதலிடத்தையும் (ரூ.50 ஆயிரம்), சென்னை பனிமலர் கல்லூரி அணி இரண்டாமிடத்தையும் (ரூ. 30,000) வென்றன. பெண்கள் பிரிவில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் அணி முதலிடத்தையும் (ரூ. 25,000), சென்னை செயின்ட் ஜோசப் அணி இரண்டாமிடத்தையும் (ரூ. 20,000) பிடித்தன. பரிசளிப்பு விழாவிற்கு வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்க சேர்மனும் விஐடி துணைத்தலைவருமான கோ.வி.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பைகளை வழங்கினார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சங்கத் தலைவர் தியாகசந்தன், செயலாளர் லட்சுமணன், துணைத்தலைவர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
