தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை நகரத்தில் மின்சாரப் பேருந்து இயக்கமும், அனுபவமும் - ஓர் ஆய்வு - வி. தயானந்தம்

21 Nov 2025, 2:51 pm
சென்னை நகரத்தில் மின்சாரப் பேருந்து இயக்கமும், அனுபவமும் - ஓர் ஆய்வு -  வி. தயானந்தம்
<p><strong>சென்னை நகரத்தில் மின்சாரப் பேருந்து இயக்கமும், அனுபவமும் - ஓர் ஆய்வு&nbsp;</strong></p> <p>சென்னை, தமிழகத்தின் தலைநகரம். இங்கு 68 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தினமும் வந்து போகும் பயணிகளையும் சேர்த்தால், சுமார் 1 கோடி பேர் பயன்படுத்தும் நகரமாக இது உள்ளது. சென்னையில் இயங்கும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) தினமும் 35 லட்சம் பேர் பயணிக்கின்றனர். 619 வழித்தடங்களில் 3200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றுடன், 56 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உட்பட 63 லட்சம் வாகனங்கள் நகரில் இயங்குகின்றன. இதனால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல், விபத்து மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. &nbsp;போக்குவரத்து நெரிசல் தீர்வு என்ன? &nbsp;உலக வங்கியின் ஆலோசனைப்படி, மக்கள் தொகை அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க &nbsp;பொதுப் போக்குவரத்துச் சேவையை அதிகரிக்க வேண்டும். 2032-ஆம் ஆண்டில் தினமும் 53 லட்சம் பேர் பயணம் செய்யும் வகையில், பேருந்து களின் எண்ணிக்கையை 7578 ஆக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. &nbsp;மின்சாரப் பேருந்து இயக்கம்: தனியார்மயமாக்கலா? &nbsp;கூடுதல் பேருந்து சேவைக்காக, தமிழக அரசு முதற்கட்டமாக 625 மின்சாரப் பேருந்துகளை தனியார் நிறுவனம் (OHM-Ashok Leyland துணை நிறுவனம்) மூலம் GCC (Gross Cost Contract) அடிப்படையில் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, ஏசி அல்லாத பேருந்துக்கு ஒரு கி.மீ.க்கு ₹77.16-ம், ஏசி பேருந்துக்கு ₹80.86-ம் 12 ஆண்டுகளுக்கு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. &nbsp;ஒப்பந்தச் சாரம்: பேருந்துகளைப் பராமரித்தல், ஓட்டுநர் சம்பளம் ஆகியவற்றை OHM நிறுவனமும்; நடத்துநர் சம்பளம், வரவு-செலவு போன்றவற்றை எம்டிசி (MTC) நிர்வாகமும் மேற்கொள்ளும். தற்போதைய நிலை: வியாசர்பாடி, பெரும்பாக்கம் பணிமனைகளிலிருந்து 255 பேருந்துகள் (95 ஏசி பேருந்துகள்) இயக்கப்படுகின்றன. &nbsp;பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு &nbsp;ஒரு மின்சாரப் பேருந்தின் விலை சுமார் ₹1.37 கோடி ஆகும். அதிக விலை காரணமாக, மின்சாரப் பேருந்துகள் டீலக்ஸ் பேருந்து கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. &nbsp;பயனாளிகள் மாற்றம்: சாதாரண கட்டணப் பேருந்துகளில் பயணித்த ஆண், பெண் பயணிகள் மின் பேருந்துகளுக்கு மாறவில்லை. இரு சக்கர வாகனம்/கார் பயன்படுத்தும் மக்களும் மின் பேருந்துக்கு மாறவில்லை. &nbsp;விடியல் பயணம் பாதிப்பு: பெண்களுக்கு அளிக்கப்பட்ட &lsquo;விடியல் பயணம்&rsquo; சேவை மின்சாரப் பேருந்துகளில் அளிக்கப்படவில்லை. &nbsp;எம்டிசி பேருந்துகள் நிறுத்தம்: புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இயக்கப்பட்ட எம்டிசி பேருந்து வழித்தடங்களை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் மின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், விடியல் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் சாதாரண கட்டணப் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. &nbsp;தனியார்மயம், சமூகநீதி மற்றும் தொழிலாளர் பாதிப்பு &nbsp;சென்னை வழித்தடங்கள் தேசியமயமாக்கப் பட்டவை. ஆனால், 2018-ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் விதி 288(A)-ஐப் பயன்படுத்தி, தற்போது திமுக அரசு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குகிறது. &nbsp;இடஒதுக்கீடு மறுப்பு: தனியார் மூலம் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்கள் போன்ற பணியிடங்கள் நிரந்தரமற்ற வேலையாக மாறுகின்றன. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாததால், சமூகநீதி முற்றிலும் மறுக்கப்படுகிறது. &nbsp;தொழிலாளர் இடமாற்றம்: மின் பேருந்துகள் இயக்கப்படும் பணிமனைகளில் (வியாசர்பாடி, பெரும்பாக்கம் உட்பட) பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் வேறு பணிமனைகளுக்கு அவசரகதியில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், தினசரி பயணச் சிரமம், பணி ஒதுக்கீடு, அடிப்படை வசதிகள் இன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பூந்தமல்லி, ஆலந்தூர், திருவான்மியூர் உட்பட மேலும் பல பணிமனைகள் மின் பேருந்து பணிமனைகளாக மாற்றப்பட உள்ளன. &nbsp;சிஐடியு-வின் நிலைப்பாடு &nbsp;தமிழக அரசு பொதுப் போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், தனியார் மூலம் வாட கைக்கு எடுத்து இயக்கக் கூடாது, இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பளித்து சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி வருகிறது. &nbsp;போராட்டங்கள்: சிஐடியு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த மே 2025-இல் சென்னையில் பல லட்சம் நோட்டீஸ்கள் மூலம் மக்கள் சந்திப்பு தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. மேலும், &lsquo;Engine of Tamilnadu&rsquo; என்ற பொதுப் போக்குவரத்து குறித்த குறும்படத்தையும் வெளியிட்டது. &nbsp;கோரிக்கை: மின் பேருந்து, சிஎன்ஜி போன்ற பேருந்துகள் எம்டிசி கழகத்தின் மூலமாகவே, மக்கள் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களில் இயக்கப்படுவதே மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். &nbsp;ஒப்பந்தத் தொழிலாளர்களின் அவலநிலை &nbsp;எம்டிசி நிர்வாகத்தின் ஒப்பந்ததாரர் மூலம் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, ₹24 ஆயிரம் ஊதியத்தில் பி எப், இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், அவை முறையாகச் செலுத்தப்படுகின்றனவா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. &nbsp;சட்ட மீறல்: 12 மணி நேர வேலை, வார ஓய்வு மறுப்பு, போனஸ், இதர அலவன்ஸ் மறுப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு அளிக்கப்படாமை, பிஎப், இஎஸ்ஐ தொகை சரியாகச் சேராதது போன்ற சட்ட மீறல்கள் நடக்கின்றன. நிர்வாகக் கண்காணிப்பின்மை: குறைந்த பட்ச ஊதியச் சட்டம், வருங்கால வைப்புநிதிச் சட்டம், போனஸ் பட்டுவாடா சட்டம் போன்ற சட்டங்கள் பொருந்தினாலும், இவற்றை எம்டிசி நிர்வாகம் கண்காணிப்பதில்லை. போனஸ் வழங்கப்படாததற்காக சிஐடியு தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.