தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்!
26 Feb 2026, 3:28 pm
<p><strong>தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்!</strong></p>
<p>தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்</p>
<p>சென்னை, பிப். 26 - தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில், ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலை நடத்து மாறு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வியாழக் கிழமை (பிப். 26) சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடு தியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, பாஜக, ஆம் ஆத்மி, பகு ஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய தேசியக் கட்சிகளின் சார்பிலும்; திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய மாநிலக் கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பது, தேர் தலை ஒரே கட்டமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தனர். ‘வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம்’ இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ள நிலையில், சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் அடையாளம் காண முடியவில்லை என்ற அடிப்படையில் பட்டியலில் விடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியதாகவும், இதற்கு விளக்கமளித்த தேர்தல் அதி காரிகள், சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பத்து நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர்களைச் சேர்க்கலாம் என்றும், அதற்கான கால அவகாசம் இருக்கிறது என்று கூறியதாகவும் தெரி வித்தார். முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்த கோரிக்கை இதையடுத்து, “அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்களின் ஒப்புத லோடு புதிய வாக்காளர்களின் பெயர் களைப் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று தாங்கள் வலியுறுத்தியதாகவும் பெ. சண்முகம் தெரிவித்தார். “அவரவர் விருப்பத்திற்கேற்ப மனு கொடுப்பது, பெயர்களைச் சேர்ப்பது என்பது முறைகேடுகளுக்கு வழிவகுக் கும் என்பதால், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களின் ஒப்புதலு டன் மட்டுமே பெயர்களை இணைக்க வேண்டும்” என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திய தாக அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், முதல் கட்டத்திலேயே சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் சண்முகம் தெரிவித்தார். இயந்திர வரிசையில் மாற்றம் வேண்டும் வாக்குச்சாவடிகளில் தற்போது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், விவிபேட் என்ற வரிசையில் இருக்கும் அமைப்பை மாற்றி, பேலட் யூனிட், விவிபேட், கண்ட்ரோல் யூனிட் என்ற வரிசையில் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தியதாகவும் பெ. சண்முகம் தெரிவித்தார். திருவிழாக்களை கணக்கில் கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள் மற்றும் பண்டிகை களை கணக்கில் கொண்டு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் தாங்கள் கோரிக்கை விடுத்ததாக சண்முகம் தெரிவித்தார். இதற்கு முன்பு ஒருமுறை சித்திரை திருவிழாவுக்கு ஒரு நாள் முன்பாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டதால், தென் மாவட்ட மக்களால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது என்பதை அவர் நினைவுபடுத்தினார். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தேர்தல் தேதியை நிர்ணயிக்கும் பட்சத்தில், சித் திரை திருவிழா மற்றும் சித்திரை வருடப் பிறப்பு ஆகியவற்றை தேர்தல் ஆணை யம் கட்டாயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாங்கள் கோரியதாக அவர் குறிப்பிட்டார். ‘பரிசுகள் விநியோகத்தை தடுக்க முடியவில்லை!’ இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணை யம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், ஏனெனில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பல கட்சிகள் பரிசுப் பொருட்கள் வழங்குவதை மாநிலம் முழுவதும் தொடங்கி விட்டதாகவும் சண்முகம் தெரிவித்தார். இதை தேர்தல் ஆணையத்தின் கவ னத்திற்கு கொண்டு சென்றதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த செல வை விட பல மடங்கு அதிகமாக செல வழிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதால், வாக்காளர்களு க்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதை யும் பணம் தருவதையும் கண்காணி த்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், இதனை கவ னமாகக் கேட்டுக்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதி அறிவித்த பின்னரே தடுக்க முடியும், அதற்கு முன்பாக பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க எந்த வழிமுறை களும் இல்லை என்று கைவிரித்த தாகவும் தெரிவித்தார். பிரச்சாரத்தில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும்போது மற்ற கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும் வாய்ப்பு மறுக்கப்படு வது அல்லது தேதி மாற்றச் சொல்வது கடந்த காலங்களில் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, யார் முதலில் விண்ணப் பிக்கிறார்களோ அவர்களுக்கு கட்டா யம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், விவிஐபி வருகை காரண மாக மற்ற கட்சிகளை தேதி மாற்றச் சொல்லக் கூடாது என்றும், அனை வருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியதாகவும், இந்தக் கோரிக்கையை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படிவம் 17சி குறித்த கேள்விகள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வழங்கப்படும் படிவம் 17சி-ஐ பதிவேற்றம் செய்தால் அனைவரும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும் என்று தாங்கள் கூறியதாகவும், இதற்கு விளக்கமளித்த அதிகாரிகள், படிவம் 17சி என்பது பொதுமக்களுக்கான ஆவணம் இல்லை, சம்மந்தப்பட்ட வேட் பாளர்கள் மற்றும் அவர்களது முக வர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஆவணம் என்றும், ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதேனும் பிரச்சனை இருந்தால் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நேர்மையாகவும், அனைத்துக் கட்சி களுக்கும் சமவாய்ப்புகள் அளிக்கும் அடிப்படையிலும் நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலி யுறுத்தியதாகவும் சண்முகம் தெரிவித்தார். தேர்தல் ஆணையரின் உறுதிமொழி இறுதியாக, தமிழ்நாட்டில் நேர்மை யான ஜனநாயகப்பூர்வமான தேர்தல் நடத்துவதற்கான அனைத்து நட வடிக்கைகளையும் தேர்தல் ஆணை யம் மேற்கொள்ளும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உறுதிப்படுத்தியதாகவும் பெ. சண்முகம் கூறினார். ஆலோசனைக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினாரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலை யில், கட்சியின் மகத்தான தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு மறைவை யொட்டி, அந்தக் கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. எனினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திய அதே கோரிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்துவதாக தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனையும் தேர்தல் அதிகாரி கள் முறையாகப் பதிவு செய்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சண்முகம், 74 லட்சம் பேர் விடுபட்டுள்ளது மிக வும் அதிகமான எண்ணிக்கை என்றும், தகுதியுடைய ஒரு வாக்காளர் கூட விடு பட்டுவிடக் கூடாது என்பதை தேர்தல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அதற்கு தேர்தல் ஆணையர் உரிய விளக்கம் அளித்ததாகவும் கூறினார். தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் வழங்கி வருவதாகவும், எந்தக் கட்சி வழங்கினாலும் அது தவறு என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றும், சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப்பூர்வ மாகவும் நடைபெற வேண்டும் என்பதே தம் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் சண்முகம் வலியுறுத்தினார். காங்கிரஸ் - அதிமுக கோரிக்கைகள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, தேர்தல் நடைமுறைகள் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் நிறைய தகுதியான வாக்காளர்கள் இணைக்கப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகளிடம் உள்ள வாக்கா ளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் சார்பில் 65,000 வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும், வாக்குப் பதிவின்போது வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டர் வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். தேர்தலை ஒரே கட்டமாக, ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை யையும் அவர் முன்வைத்தார்.</p>
