தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளியே தேர்தல்... உள்ளே மல்யுத்தம்! வேட்பாளர் தேர்வால் தெறிக்கும் மேற்கு வங்க அரசியல்!

22 Mar 2026, 4:19 pm
வெளியே தேர்தல்... உள்ளே மல்யுத்தம்! வேட்பாளர் தேர்வால் தெறிக்கும் மேற்கு வங்க அரசியல்!
<p><strong>வெளியே தேர்தல்... உள்ளே மல்யுத்தம்! வேட்பாளர் தேர்வால் தெறிக்கும் மேற்கு வங்க அரசியல்!</strong></p> <p>மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எதிரிக் கட்சியுடன் மோதுவதை விடச் சொந்தக் கட்சித் தொண்டர்களுடனேயே மோதி &ldquo;எனர்ஜி&rdquo;யை வீணாக்குவதில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவில் &lsquo;பார்த்தா&rsquo; பீதி பெலேகாட்டா தொகுதியில் பார்த்தா சவுத்ரி என்பவரை வேட்பாளராக அறிவித்த தற்கு, அந்தப் பகுதி பாஜக தொண்டர்கள் கொதித்தெழுந்து சால்ட் லேக் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். &ldquo;பார்த்தா சவுத்ரி வந்தால் திரிணாமுல் தான் ஜெயிக்கும்&rdquo; என்று சொந்தக் கட்சியினரே முழக்கமிடுவது வேடிக்கையாக உள்ளது. இதேபோல் பாலகர் தொகுதியில் திரிணாமுல்லில் இருந்து &nbsp;சமீபத்தில் தாவிய சுமணா சர்க்கார் என்பவ ருக்கு பாஜக சீட் கொடுத்ததைக் கண்டித்து, பாஜக தொண்டர்கள் நாற்காலிகளைத் தூக்கிப் போட்டு ரகளை செய்தது கட்சியின் &ldquo;கட்டுக்கோப்பை&rdquo; அம்பலப்படுத்தியுள்ளது. திரிணாமுல் களேபரம் மறுபுறம், ஆளும் திரிணாமுல் காங்கிரஸிலும் உட்கட்சி பூசல் வீதிக்கு வந்துவிட்டது. கண்டோகோஷ் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ நபின் சந்திர பாக்கிற்கு மீண்டும் சீட் கொடுத்ததை, அந்தப் பகுதி பிளாக் தலைவர் அபார்த்திபா இஸ்லாமால் ஜீரணிக்க முடியவில்லை. &ldquo;அவருக்குக் கொடுத்தால் நான் வேலை செய்ய மாட்டேன்&rdquo; என்று அவர் போர்க்கொடி தூக்கியிருப்பது மம்தா பானர்ஜிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், மேற்கு வங்கத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, இரண்டு கட்சிகளுமே எதிரியைத் தேடிப் போக வேண்டிய அவசியமே இல்லை; சொந்தத் தொண்டர்களே வேட்பாளர்களை &ldquo;கவனித்துக் கொள்கின்றனர்&rdquo;.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.