குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு தேர்தல் தான்! அரசியல் நோக்கத்தைச் சொன்ன அண்ணாமலை
18 Dec 2025, 5:31 pm
<p><strong>குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு தேர்தல் தான்! அரசியல் நோக்கத்தைச் சொன்ன அண்ணாமலை</strong></p>
<p>திருப்பூர் குப்பை பிரச்சனை தொடர்பாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அங்கு வந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணா மலை, குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு தேர்தல்தான் என்று கூறி, தனது நோக்கம் அரசியல் ஆதாயம் தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். திருப்பூரில் குப்பை பிரச்சனை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நகரில் குப்பையை அகற்ற முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறித் திண் டாடி வருகிறது. இடுவாய் கிராமத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத் தில் தற்காலிகமாக தரம் பிரித்தக் குப்பையைக் கொட்டலாம் என மாநக ராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவைப் பெற்றுள்ளது. இடுவாய் கிராம மக்களும் அங்கு குப்பை கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனினும் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ள நிலையில் அங்கு குப்பை கொட்ட மாநகராட்சி வாகனத்தைக் கொண்டு சென்றனர். அதற்கு எதிராக மக்கள் மறியலில் ஈடு பட்டனர். நீதிமன்ற உத்தரவிட்ட நிலை யில் போராட்டத்துக்கு அனுமதிக்க முடி யாது என்று காவல் துறையினர் கைது செய்வதாக அறிவித்தனர். இந்நிலை யில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்பிரச்சனையில் காவல் துறையினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10 பேரை கைது செய்து சிறையில் அடைத் தனர். இந்நிலையில் காவல் துறையின் நட வடிக்கையை கண்டித்து பாஜக சார்பில் அண்ணாமலை பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் திருப்பூரில் வியாழனன்று நடத்துவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு காவல் துறை அனு மதி மறுத்தது. எனவே திருப்பூர் குமரன் சிலை அருகில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த பாஜக வினரிடம் அனுமதி மறுக்கப்பட்டதைக் கூறி காவல் துறையினர் கைது செய்த னர். இங்கு பேசிய அண்ணாமலை, காவல் துறையை விமர்சித்து விட்டு, எனினும் நமது நோக்கம் காவல் துறை அல்ல, ஆளும் ஆட்சியாளர்கள் தான் என்றார். அத்துடன் குப்பை பிரச் சனைக்கு நிரந்தரத் தீர்வு தேர்தல் தான் என்று கூறினார். குப்பை பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இப்பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதார சீர்கேட்டைத் தடுக்க வேண்டும், இப்பிரச்சனையில் தமிழக அரசு நேரடியாகத் தலையிட்டு குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேசமயம் குப்பை பிரச்சனை கார ணமாக போராட்டத்துக்கு தள்ளப்ப டும் மக்கள் மீது காவல் துறை அடக்கு முறை கண்டிக்கத்தக்கது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக கூறி யுள்ளது. ஆனால் அண்ணாமலை குப்பை பிரச்சனை தீர்வதற்கு உரிய வழிமுறை எதையும் சொல்லவில்லை. மாறாக “தேர்தல்தான் தீர்வு!” என்று சொல்லி, பாஜக போராடுவதன் நோக்கம் குப்பை பிரச்சனை தீர்வது அல்ல, அரசியல் ஆதாயம் தான் என்பதை வெளிப்படை யாக ஒப்புக் கொண்டார். ஒன்றிய அரசை ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக சுற்றுச்சூழல் மாசு பாடு பிரச்சனையில் உரிய தெளிவான நிலையை தெரிவிக்க வேண்டும். ஆனால் பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளாவின் போது கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு குப்பை, கழிவு, மாசு அதிகரித்ததை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. அதே போல் தற்போது டில்லியில் காற்று மாசு ஆபத்தான அளவுக்கு அதிகரித் திருக்கிறது. அதைத் தடுக்க முடியாத பாஜக மாநில அரசு கடந்த கால ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. ஆனால் திருப்பூரில் வந்து குப்பை பிரச்சனைக்கு உருப்படியான தீர்வைச் சொல்லாமல், “எரிகிற வீட்டில் பிடுங்கி யது ஆதாயம்!” என அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. அதையும் வெட் கமே இல்லாமல் அண்ணாமலை பகிரங் கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என் பதை நகர மக்கள் மட்டுமின்றி, கிராம மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். வே.தூயவன்</p>
