தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு

28 Mar 2026, 4:13 pm
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு   தேர்தல் பயிற்சி வகுப்பு
<p><strong>வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு &nbsp; தேர்தல் பயிற்சி வகுப்பு</strong></p> <p>தஞ்சாவூர், மார்ச் 28- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா பள்ளியில், தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு ட்பட்ட வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, பேராவூரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், முத்திரை த்தாள் கட்டண தனித்துணை ஆட்சியருமான பி. கலியமூர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. &nbsp;பேராவூரணியில் நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை, மைய பொறுப்பு அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் (அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை) எஸ். ராமன் வழிநடத்தினார். &nbsp;இதில், மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பேராவூரணி தொகுதிக்கு ட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். காலையில் 442 பேருக்கும், மாலையில் 522 பேருக்கும் என மொத்தம் 964 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் மற்றும் பி1, பி2, பி3 நிலைகளில் பணியாற்றும் அலுவலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். &nbsp;இப்பயிற்சி முகாமில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், பேராவூரணி வட்டாட்சியருமான பாலசுப்பிரமணியன், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பி ரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தெய்வானை மற்றும் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தேர்தல் தொடர்பான பயிற்சி அளித்தனர். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. &nbsp;செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தீபா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மருத்துவ முகாம் நடத்தினர். பேராவூரணி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.