தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் வியூகம் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

3 Apr 2026, 6:05 pm
தேர்தல் வியூகம்  ராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
<p><strong>தேர்தல் வியூகம்&nbsp; ராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை</strong></p> <p>ராணிப்பேட்டை, ஏப்.3 &ndash; சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர். காந்தி தலைமையில் நடைபெற்றது. &nbsp;இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.எஸ். சங்கர் மேஸ்திரி, விசிக மத்திய மாவட்டச் செயலாளர் சீம. ரமேஷ் கர்ணா, மேற்கு மாவட்டச் செயலாளர் பாபு வளவன், மதிமுக மாவட்டச் செயலாளர் பி.என். உதயகுமார் மற்றும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நரேஷ் குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தொகுதி வாரியாக களப்பணிகளை முடுக்கிவிடுவது, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே ஒருங்கி ணைப்பை ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்த அமைச்சர் ஆர். காந்தி, கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி னார். இக்கூட்டம் தேர்தல் பணிகளில் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.