கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்
6 Apr 2026, 5:37 pm

தேர்தல் பாதுகாப்பு படையினர் வருகை

நாமக்கல், ஏப்.6- தேர்தல் பாதுகாப்புக்கு ராணுவ மத்திய பாதுகாப்பு படையினர் 105 பேர் குமாரபாளையத்தில் ஞாயிறன்று அணிவகுப்பில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தலில், பொதுமக்கள் அச்ச மின்றி, சுதந்திரமாக வாக்களிக்கும் விதமாக பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, குமாரபாளையத்திற்கு திங்களன்று மத்திய ராணுவ பாதுகாப்பு படையினர் 105 பேர் வருகை தந்தனர். இவர்கள், ராஜம் தியேட்டர் முன்பிருந்து, சேலம் சாலை, இடைப்பாடி சாலை வழியாக காவேரி நகர் வரை அணிவகுப்பு நிகழ்ச்சியை மேற்கொண்ட னர். ஏற்கனவே 150 பேர் வருகை தந்து பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு, ஏப்.6- செண்பகபுதூர் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). இவர் தனது மனைவி, மனைவியின் சகோதரி மகன் ரக்ஷன் (17) ஆகியோரு டன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரி தடுப் பணைக்கு ஞாயிறன்று சுற்றுலா வந்துள்ளார். அணை யில் குளிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள தால், அவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, செல்லும் வழியில் புன்செய் புளியம்பட்டியை அடுத்த செண்பகபுதூர் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி கார்த்திகேயன், ரக்ஷன் ஆகியோர் குளித்துள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாத ரக்ஷன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது, நீரில் மூழ்கி தத்தளித்துள் ளார். இதைப்பார்த்த கார்த்திகேயன் ரக்ஷனை காப் பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர் கள், இரண்டு குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடு பட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கார்த்திகேயன், ரக்ஷனின் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோவில் திருவிழாவின்போது தாக்குதல்: கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

கோவில் திருவிழாவின்போது தாக்குதல்: கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் கோபி, ஏப்.6- கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் திரு விழாவில் பெண் உட்பட 3 பேரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கொள்ளுமேட்டு காலனியில் உள்ள அன்னமார் கோவில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. அப் போது, அதே பகுதியை சேர்ந்த சரண் (21), அவரது உற வினர்கள் சக்திவேல், கவிதா ஆகியோரிடம், காசி பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்களான பிரவீன், பரத், நந்தகுமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகி றது. இதில் காயமடைந்த சரண், சக்திவேல், கவிதா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து கடத்தூர் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய வர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காயமடைந்த நபர்களின் உறவினர்கள் ஞாயிறன்று நம்பியூர் - கோபிசெட்டிபாளையம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது.