முந்தய பக்கம்

அருமனை காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகள் விளக்க கூட்டம்

19 Mar 2026, 3:18 pm
அருமனை காவல் நிலையத்தில்  தேர்தல் விதிமுறைகள் விளக்க கூட்டம்
<p><strong>அருமனை காவல் நிலையத்தில் &nbsp;தேர்தல் விதிமுறைகள் விளக்க கூட்டம்</strong></p> <p>அருமனை, மார்ச். 19- தமிழக சட்டமன்றத் தேர் தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் விதிமுறை கள் குறித்து பல்வேறு பகுதி களில் அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் விளக்கி வருகின்றனர். &nbsp;இந்நிலையில் &nbsp;அரு மனை காவல் நிலையத்தில் புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் காவல் ஆய்வாளர் கமலா தேவி அழைப்பு விடுத்தார். &nbsp; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த சசிகுமார், மணி, கிறிஸ்டோபர், பாஜக சார்பில் ஹரிஷ் குமார், ஆனந்த், காங்கிரஸ் கட்சி சார்பில் கமலன், ஆர் ஜே டி சார்பில் சுமித் குமார் ஆகி யோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி யில் தேர்தல் விதிமுறைகள் குறித்தும் அருமனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளில் பொ துக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் அறிவு றுத்தப்பட்டது. தேர்தல் காலங்களில் அனைத்து அர சியல் கட்சிகளும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாக்குகளை கேட்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரை களை ஆய்வாளர் வழங்கி னார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram