தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

25 Mar 2026, 4:19 pm
மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
<p><strong>மதுரை மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்</strong></p> <p>மதுரை, மார்ச் 25- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடை பெற உள்ளதை முன்னிட்டு, &nbsp;மதுரை மாவட்டத்தில் வாக் காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நடவ டிக்கைகள் பல்வேறு வடிவங் &nbsp;களில் தீவிரமாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதனொரு பகுதியாக புத னன்று, மதுரை மற்றும் திண் &nbsp;டுக்கல் மாவட்ட ஆட்சியர் &nbsp;கள் இணைந்து, மதுரை&ndash; திண்டுக்கல் மாவட்ட எல் &nbsp;லையான பரளிபுதூர் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள வாகன தணிக்கைச் சாவடி யை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு பறக்கும் படை மற்றும் நிலை யான கண்காணிப்புக் குழு வினர் இரவு - பகலாக வாக னங்களை சோதனை செய்து &nbsp;வருகின்றனர். &nbsp;தேர்தல் காலத்தில் பணம், பொருட்கள் மற்றும் &nbsp;அனுமதியில்லா பிரச்சாரப் &nbsp;பொருட்கள் கடத்தப்படுவ தைத் தடுக்க இந்த தணிக்கை கள் மேற்கொள்ளப்படுகின் றன. அதிகாரிகளின் தணி க்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, கண்கா ணிப்பை மேலும் வலுப்படுத்த &nbsp;தேவையான ஆலோசனை களையும் வழங்கினர். இந்த &nbsp;ஆய்வில் இரு மாவட்டங்க ளின் காவல் கண்காணிப்பா ளர்களும் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்தனர். அதே நேரத்தில், மதுரை &nbsp;கிழக்கு சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் நடைபெற்ற மக ளிர் சுய உதவிக் குழுக்களின் &nbsp;சமத்துவ பொங்கல் விழா வில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு, மகளிரு டன் இணைந்து கும்மி அடி த்து, மாட்டு வண்டியில் பய ணம் செய்து வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தி னார். &ldquo;என் வாக்கு என் &nbsp;கடமை &ndash; 100% வாக்களிப் &nbsp;போம்&rdquo; என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, பொதுமக்களு டன் இணைந்து உறுதிமொழி யும் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், நகர்ப்புற மக்க ளிடையே வாக்குப் பதிவு &nbsp;விழிப்புணர்வை அதிகரிக் கும் நோக்கில், மதுரையில் கல்லூரி மாணவர்கள் பங் &nbsp;கேற்ற வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. &nbsp;யாதவர் ஆண்கள் கல் &nbsp;லூரி வளாகத்தில் தொடங் கிய இந்த பேரணி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேங்க் காலனி வரை நடை பெற்றது. பேரணியில் மாண வர்கள் பதாகைகள் மற்றும் &nbsp;முழக்கங்கள் மூலம் வாக்கின் &nbsp;முக்கியத்துவத்தை வலியு றுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் தேர் &nbsp;தல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அதி காரிகளும் கலந்து கொண்டு &nbsp;விழிப்புணர்வை ஏற்படுத்தி னர். தேர்தல் நேர்மையாக வும், முழுமையான வாக்குப் பதிவை உறுதி செய்யும் நோக்கிலும் இதுபோன்ற நட வடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரி கள் தெரிவித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.