புதுச்சேரியில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிப்பு தேர்தல் அதிகாரி ஆர். ஜவகர் அறிவிப்பு!
26 Mar 2026, 2:46 pm
<p><strong>புதுச்சேரியில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிப்பு தேர்தல் அதிகாரி ஆர். ஜவகர் அறிவிப்பு!</strong></p>
<p>சென்னை, மார்ச் 26- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க, 30 தொகுதி களிலும் முதல்முறையாக டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆர்.ஜவகர் தெரிவித்துள்ளார். சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் புதுச்சேரியில் வியாழ னன்று (மார்ச் 26) நடைபெற்ற ஊடகவி யலாளர்களுக்கான தேர்தல் பயிலரங்கில் அவர் பேசியதாவது: "நாட்டிலேயே முதல்முறையாகப் புதுச்சேரியின் அனைத்துத் தொகுதிகளிலும் டிரோன்கள் மூலம் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகே ஆகிய பகுதிகளில் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளன. 'மெய்ப்பொருள்' எனும் விழிப்புணர்வு இயக்கம் மூலம் வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்தாலும் அதனைக் கண்டறியத் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வெளிநாட்டுத் தேர்தல் பார்வையாளர்கள் 15 மாதிரி வாக்கு மையங்களில் தேர்தல் நடைமுறைகளை நேரில் பார்வையிட உள்ளனர்." நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆர். கலைவாணன், "மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க 19 இடங்களில் சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவிஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிக்காக 45 கம்பெனி துணை ராணுவப் படையி னர் வரவழைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 25 அன்று 3 கிலோ தங்கம் பறி முதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது," என்றார். தொடர்ந்து பேசிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வை. பழனிச்சாமி, தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து ஊடகங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்கள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களைத் தகுந்த ஆதாரங்களுடன் சரிபார்த்த பின்னரே செய்திகளாக வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் பி. அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
