தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமூக நீதிக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனைக்கும் இடையிலான போராட்டமே இந்தத் தேர்தல் - கனிமொழி எம்.பி., பிரச்சாரம்

10 Apr 2026, 5:30 am
சமூக நீதிக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனைக்கும் இடையிலான போராட்டமே இந்தத் தேர்தல் - கனிமொழி எம்.பி., பிரச்சாரம்

சமூக நீதிக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனைக்கும் இடையிலான போராட்டமே இந்தத் தேர்தல் - கனிமொழி எம்.பி., பிரச்சாரம்

நாமக்கல், ஏப்.9- “தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல், சமூக நீதிக்கும் ஆர். எஸ்.எஸ் அமைப்பின் சிந்தனைக்கும் இடையேயான போராட்டம்” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம். பி., தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி., வியாழனன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல் புதுச் சத்திரம், நாமக்கல் பூங்கா சாலை மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் அவர் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, பாஜகவுடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதே மக்கள் நலனுக்கு முற்றிலும் விரோதமானது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் புதிய சட்டங்கள் உருவாக்கும் மக்களைப் பாதிக்கும் வகையில் உள்ளன. அதேபோல், தொகுதிச் சீரமைப்பு நடவடிக்கைகளில் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்காமல் பாஜக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கிறது.

அந்த முடிவின் கருத்துகள் சிலருக்குப் பொருந்து வளம், ஆனால் தமிழ்நாட்டிற்கு அவை ஒருபோதும் எட்டாது. தற்போது அதிமுகவும் பாஜகவின் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது என்றார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரங்களில் குமாரபாளையம் வேட்பாளர் எம்.பாபு, நாமக்கல் வேட்பாளர் ராணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, சேலம் மேற்குத் தொகுதிக்குட்பட்ட மெய்யனூர் பகுதியில் வேட்பாளர் அ.ராஜேந்திரன் மற்றும் சேலம் மேற்குத் தொகுதிக்குட்பட்ட கந்தம்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் லோகநாதன் ஆகியோரை ஆதரித்து கனிமொழி எம்.பி., வாக்கு சேகரித்தார்.

தருமபுரி இதேபோன்று, தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க.கலை அமுதுவை ஆதரித்து புதனன்று பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில், திமுக தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆ.மணி எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் முல்லை ரவி, ஆதிராவிடர் நலக்குழுத் துணை செயலாளர் ராஜேந்திரன், சமூக வலைதள மாநிலப் பொறுப்பாளர் அரிபா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா. சிவராமன், ஒன்றியச் செயலாளர் பி. குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.கலைச்செல்வம், விசிக மாவட்டச் செயலாளர் சாக்கன் சர்மா, மதிமுக மாவட்டச் செயலாளர் ராமதாஸ், தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.