முந்தய பக்கம்

தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

18 Feb 2026, 3:04 pm
தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம்
<p><strong>தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம்</strong></p> <p>கோவை, பிப்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.எஸ். குளம் கிழக்கு இடைக்குழு சார்பில் அரசி யல் விளக்க, நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் கிழக்கு இடைக் குழு சார்பில் அரசியல் விளக்க, நிதியளிப்பு பொதுக்கூட்டம் செவ்வாயன்று நேருநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இடைக்குழு செயலளர் எஸ்.வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். இடைக்குழு உறுப்பினர் பி.கிருஷ்ணசாமி வரவேற்றார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே. எஸ்.கனகராஜ், மாவட்டக்குழு ஆர்.மகேஸ் வரன், ஆர்.கோபால்சங்கர், எஸ்.பாரதி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத் தில் தேர்தல் நிதியாக பொது மக்களிடம் உண்டியல் மூலம் வசூல் செய்த ரூபாய் 3 லட்சம் தொகையினை எஸ்.கிருஷ்ணமூர்த்தி யிடம் இடைக்குழு உறுப்பினர்கள் வழங்கி னர். இதில் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நிறைவாக நேரு நகர் கிளைச் செயலாளர் ப.ஜெயா அத்திமா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram