விழுப்புரத்தில் ரூ.12 லட்சம் தேர்தல் நிதி அளிப்பு
10 Jan 2026, 2:48 pm
<p><strong>விழுப்புரத்தில் ரூ.12 லட்சம் தேர்தல் நிதி அளிப்பு</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை (ஜன.10) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கலந்து கொண்டார். அவரிடம் விழுப்புரம் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதி முதற்கட்டமாக ரூ. 12 லட்சத்தை மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மூத்த தலைவர் ஆர். ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
