முந்தய பக்கம்

தேர்தல் நிதி வழங்கிய போக்குவரத்து ஓய்வு பெற்றோர்-கூட்டுறவு ஊழியர்கள்

11 Apr 2026, 5:30 am
தேர்தல் நிதி வழங்கிய போக்குவரத்து ஓய்வு பெற்றோர்-கூட்டுறவு ஊழியர்கள்

தேர்தல் நிதி வழங்கிய போக்குவரத்து ஓய்வு பெற்றோர்-கூட்டுறவு ஊழியர்கள்

நாகர்கோவில், ஏப்.10- குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆர்.செல்லசுவாமி போட்டியிடுகிறார்.

அவரது வெற்றிக்கு தேர்தல் பணி செய்வது என்ற சங்கத்தின் முடிவின் அடிப்படையில் அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரனிடம் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் முதற்கட்ட தேர்தல் நிதியாக ரூ.10 ஆயிரத்தை வெள்ளியன்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருணாமலையனிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram