தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையச் செயல்பாடு? 5 மாநிலத் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஞானேஷ் குமார் உட்பட 3 ஆணையர்களும் “தலைமறைவு”

5 Nov 2026, 9:45 pm
மோடி அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையச் செயல்பாடு? 5 மாநிலத் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல்  ஞானேஷ் குமார் உட்பட 3 ஆணையர்களும் “தலைமறைவு”

மோடி அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையச் செயல்பாடு? 5 மாநிலத் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஞானேஷ் குமார் உட்பட 3 ஆணையர்களும் “தலைமறைவு”

2027-ஆம் ஆண்டுதொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக இன்னும் 2 மாத காலமே உள்ளது.

துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆய்வு

இந்நிலையில், இந்தத் தேர்தல்பணிகளில் ஈடுபடாமல் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 3ஆணையர்களும் தலைமறைவாக இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக, ஒரு மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன், தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட 3ஆணையர்களும் தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உள்ளூர் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது வழக்கம். அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

ஆனால், வரவிருக்கும் 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆய்வில் துணைத் தேர்தல் ஆணையர்கள் போன்ற கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டு,கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஞானேஷ் குமார் உட்பட தேர்தல் ஆணையர்கள் இதுவரை தலைகாட்டவில்லை.

ஞானேஷ் குமார் சுற்றுலா

இதுதொடர்பாகத் தெளிவான காரணம் தெரியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங்

சாந்து, விவேக் ஜோஷி ஆகிய இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் குறித்து எழுதிய கடிதங்கள் பற்றி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டது.

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த கூட்டுப் பிரமாணப் பத்திரத்தில் ‘படிவம் - 7’ (வாக்காளர்களை நீக்கும் படிவம்) உள்ளிட்ட பல்வேறுபொய்களை நீதிபதிகள் அம்பலப்படுத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதஇறுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின், 3 ஆணையர்களும் ஒன்றாக இருக்கும் காட்சிகளோ அல்லது அவர்கள் நடத்திய கூட்டங்கள் பற்றியஅறிவிப்புகளோ எதுவும் வரவில்லை.

பலத்த பாதுகாப்புப் படையுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தனது தனிப்பட்ட கோவில் வழிபாடுகள் உள்ளிட்ட சுற்றுலா நிகழ்வுகள் செய்தி நிறுவனங்களால் புகைப்

படங்களாக வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ‘விளம்பரத் தூதரகவே’ வலம் வந்தார். ஒவ்வொருவாரமும் செய்தித் தொடர்பாளர்களின் மின்னஞ்சல்களிலும், தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கங்களிலும் ஞானேஷ் குமாரின் 10புகைப்படங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. 5 மாநிலத் தேர்தல் பணி தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.

மோடி அரசின் கட்டுப்பாட்டில்

ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலத்தேர்தல் பணிகளில் பங்கேற்கவில்லையா; எஸ்ஐஆர் மூலம் நடைபெறும் வாக்குத் திருட்டு தொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் அக். 9 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இதனை எதிர்கொள்ள 3 ஆணையர்களும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஒன்றிய அரசுமுயன்றதாகவும், ஆனால் இரு ஆணையர்கள் அதற்கு மறுத்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே இணக்கமான சூழல் இல்லாததால் 5 மாநிலத் தேர்தல் பணிகள் ஆணையாளர்கள் இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனைப் பத்திரிகையாளர் ரவீஷ் குமாரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்டோபர் 2-ஆவது வாரத்தில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து எஸ்ஐஆர் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது எதிர்க்கட்சியின் பிரச்சாரத்தை முறியடிக்க மூன்று தேர்தல் ஆணையர்களும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று ஒரு ஒன்றியஅமைச்சர் தனது அரசாங்கத்திற்கும் பாஜகவிற்கும் உறுதியளித்திருந்தார். ஆனால், இதனைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மட்டுமே ஏற்றுக்கொண்டார். மற்ற2 தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறினார்.

இதன்மூலம் எஸ்ஐஆர் முறைகேட்டில் தேர்தல் நம்பகத்தன்மை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மோடி அரசு 3 தேர்தல் ஆணையர்களையும் ஒதுங்கியிருக்கச் சொன்னதா; எஸ்ஐஆர் முறைகேடுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையர்களை ஒதுக்கிவிட்டு, மோடி அரசு நேரடியாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறதா; மூத்தஆணையர்கள் இல்லாத நிலையில் ஆணையத்தின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.