கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது தேர்தல் ஆணையம்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி
12 Apr 2026, 5:30 am

கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது தேர்தல் ஆணையம்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

யும், சமூக வலைதளங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளைப் பேசியவர் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், சந்தீப் மிட்டல் மீது ஊழல் புகார்கள் நிலுவையில் இருப்பதால், இத்தகைய ஒரு அதிகாரியை முக்கியமான விசாரணை அமைப்பின் தலைவராக நியமிப்பது நடுநிலையான தேர்தலுக்கு உகந்தது அல்ல என்று கூறினார்.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த புகார்களையும் டி.ஆர். பாலு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார். அன்றே அபாண்டப்படுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! "2020-ஆம் ஆண்டில், டாக்டர் மிட்டல் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகள், 'அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968'-க்கு முரணாக அமைந்திருந்தன எனக் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் எழுதியிருந்தது.

இத்தகையச் சார்புக்களைத் தவிர, மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. டாக்டர் மிட்டல் நிர்வாகப் பிரிவு டிஜிபி-யாகப் பணியாற்றிய 'தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் நிறுவனத்தில்' பணிபுரிந்த சந்தீப் ஆனந்த் என்பவர், 2014-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

எனவே, அவர் மீது கடுமையான ஊழல் மற்றும் முறைகேடான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒரு அதிகாரி டிஜிபி-யின் தலைவராக நியமிக்கப்படுவது நடைமுறையில் பாதுகாப்பற்றதாக இருக்கும்" என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.