ஜனநாயகத்தின் கல்லறையில் தேர்தல் ஆணையம்
19 Jun 2026, 9:02 pm

ஜனநாயகத்தின் கல்லறையில் தேர்தல் ஆணையம்

இந்திய ஜனநாயகத்தின் முக்கிய கருவியாக கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், தற் போது தன் நடுநிலைத்தன்மையை முற்றிலுமாக இழந்து, அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாகச் செயல்படுவதற்கு மேலும் பல ஆதாரங்கள் கிடை த்த வண்ணம் உள்ளன. மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் ‘சிறப்பு தீவிர திருத்த’ நடவடிக்கையின் பெயரால் நடத்தப் பட்ட வாக்காளர் நீக்கம், நிர்வாகத் தோல்வி என்ப தைத் தாண்டி, ஒரு சமூகத்தின் குரலை ஒடுக்கும் திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலையாகவே பார்க்கப்படுகிறது.

சுமார் 90 லட்சம் மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது மிகப் பெரிய மோசடியாகும். 75 வயதுடைய வழக்கறி ஞர் முகமது யீன் அலி போன்றவர்கள், தங்க ளின் ஐம்பது ஆண்டுகால வாக்குரிமையை உறுதிப்படுத்த, இன்று உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள னர். தலைமை நீதிபதியே அவர் “உண்மையான குடிமகன்” என்று ஒப்புக்கொள்ளும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் கள ஆய்வு எந்த அள வுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்ற பின்னரும், 27 லட்சம் பேர் தங்க ளின் குடியுரிமைக்கான தீர்ப்புக்காகத் தீர்ப்பா யங்களில் காத்திருக்கிறார்கள் என்றால், தேர்தல் ஆணையம் யாருக்காகப் பணிபுரிகிறது?

குறிப்பாக, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் மட்டும் நீக்கங்கள் மிகத் தீவிரமாக அரங்கே றியிருப்பது, ஆணையத்தின் பாரபட்சமான போக்கைத் தெளிவுபடுத்துகிறது. வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பெயர்களை நீக்கிய ஆணையம், சேர்க்கைக்கான 9.64 லட்சம் விண் ணப்பங்களில் வெறும் 1.82 லட்சம் பெயர்களை மட்டுமே இறுதிப் பட்டியலில் சேர்த்திருப்பது எத்த கைய மோசடி? பிப்ரவரி 2026-இல் இறுதிப்பட்டியல் வெளியான பிறகும், 34 லட்சத்திற்கும் அதிக மான மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பது, தேர்தல் ஆணையத்தின் நிர்வாகச் சீர்கேட்டைப் பறைசாற்றுகிறது.

ஜனநாயகத்தின் உயிர்நாடியான வாக்குரி மையைக் காப்பதில் ஆணையம் காட்டிய இந்த அலட்சியம், வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களுக் குக் காலக்கெடு விதிக்கும் நிலைக்கு ஆணையத் தின் செயல்பாடு தள்ளப்பட்டதே அதன் தோல்வி க்குச் சான்று. தன்னிச்சையாகச் செயல்பட வேண் டிய ஒரு அரசியலமைப்பு அமைப்பு, ஆட்சியா ளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாக்காளர் பட்டி யலைச் சிதைப்பது என்பது இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். இந்த முறைகேடுகளுக்குத் தேர்தல் ஆணையம் ஒட்டு மொத்த தேசத்திடமும் பதில் சொல்லியே ஆக வேண்டும். நம்பிக்கை இழந்த இத்தகைய அமைப் புகள் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலா கும். இனியும் தாமதிக்காமல், பாதிக்கப்பட்டவர்க ளின் வாக்குரிமையை உடனடியாக மீட்டெடுக்க வேண்டியது ஆணையத்தின் தார்மீகக் கடமையாகும்.