பாஜகவுக்கு சாதகமாக பல கோடி வாக்காளர்களை நீக்கிய ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையர்களுக்கே தெரியாமல் கடுமையாக்கப்பட்ட ‘எஸ்ஐஆர்’ விதிகள்!
23 Sept 2026, 11:16 pm

பாஜகவுக்கு சாதகமாக பல கோடி வாக்காளர்களை நீக்கிய ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையர்களுக்கே தெரியாமல் கடுமையாக்கப்பட்ட ‘எஸ்ஐஆர்’ விதிகள்!

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

புதுதில்லி, செப். 23 -வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடைமுறைகளில், சக தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலைப் பெறாமலேயே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்முடிவெடுத்தார் என்ற அதிர்ச்சிகரமான உண்மை அம்பலமாகி இருக்கிறது.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தங்களின் எதிர்ப்பை, கடந்த 10 மாதங்களில் 14 முறை பதிவு செய்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீகாரில் “வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்” (SIR) பணியை துவங்கியது. வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் வழக்கமான நடைமுறைதான் இது, என துவங்கப்பட்டது. எனினும், ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக எதிர்ப்பு வாக்குகள் முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் குறிவைத்தும், மிக அதிகளவிலும் நீக்கப்பட்டன.

பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளம் என அண்மையில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, வரைவுவாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. வாக்குகளை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளும் மிகக் கடுமையாக்கப்பட்டன. இதனால், பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகளை தீர்மானித்த அல்லதுவெற்றி வித்தியாசத்தின் அளவை விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் நீக்கப்பட்டன.

இந்த நடைமுறைகளானது, பாஜக-வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செய்யும் சதி, ஜனநாயக விரோத நடவடிக்கை என நாடுமுழுவதும் தற்போது வரை கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.இந்நிலையில் தான், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மேற்கொண்ட புலனாய்வில், எஸ்ஐஆர்விஷயத்தில், தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே கடுமையான மோதல் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடைபெற்ற இந்த காலகட்டத்தில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்திற்குள் திருத்த நடைமுறைகளின் மீது தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. முக்கியமாக, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகிய இருவரும், மிகக் கடுமையான எஸ்ஐஆர் நடைமுறைகளை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர்.

14 முறை எழுந்த எதிர்ப்பு

நாடு தழுவிய அளவிலான சிறப்புத் தீவிரத் திருத்தம் மூன்றுதேர்தல் ஆணையர்களின் மேற்பார்வையிலும் தான் நடந்தது.

ஆனாலும், கடந்த 10 மாதங்களில் சாந்துவும் ஜோஷியும் தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக சுமார் 14 முறை எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரே நாளில் மட்டும்நான்கு முறை எதிர்ப்புக் கடிதங்களை கொடுத்துள்ளனர். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், இரண்டு ஆணையர்களின் எழுத்துப்பூர்வமான ஆலோசனையையும் மீறித் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது, இத்தகைய நடவடிக்கைகள் “அதிகாரப்பூர்வமற்றவை மற்றும் சட்டவிரோதமானவை” என்று சாந்து குறிப்பிட்டுள்ளார்.

மிக சமீபத்தில், ஜோஷியும் சாந்துவும் அமைச்சரவைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், வாக்காளர் பட்டியலுக்கான தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்பின் மேற்பார்வை அடுக்கை நீக்கும் வகையில் பணி ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தங்களுக்குத் தெரியாமல் செய்யப்பட்டதால் அந்த மாற்றங்களை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படி தனியாக கடிதம் எழுதும் நடைமுறை என்பது தேர்தல் ஆணையத்தில் இல்லை என்ற நிலைமையுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும். தேர்தல் ஆணையம் போன்ற ஒரு அரசியலமைப்பு அமைப்புக்குள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் வெளிக்கொண்டு வருவதாகவே, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புதுதில்லி, கொல்கத்தா, கோவா மற்றும் மும்பையைச் சேர்ந்த பல அதிகாரிகளை நேர்காணல் செய்தும், ஆவணங்களை ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தும் திரட்டியுள்ள தகவல்கள் அமைந்துஉள்ளன.

தேர்தல் ஆணையம் சமாளிப்பு

சக தேர்தல் ஆணையர்களின் குற்றச்சாட்டையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பி வரும் நிலையில், முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாக எனதேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கொடுத்த விளக்கத்தில், “தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின் 324-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுஉள்ள சட்டப்பூர்வ விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியே ஆணையம் செயல்பட்டு வருகிறது.ஏதேனும் ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக, பல்வேறு கருத்துகள் பரிசீலிக்கப்படுவதும், கருத்து வேறுபாடுகள் எழுவதும் இயல்பான ஒன்றுதான். தேர்தல் ஆணையர்கள் மட்டுமின்றி, ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் தங்களது பரிந்துரைகளைக் கூறுவதற்கு அதிகாரம் உண்டு. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி உட்பட 40 புதிய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் அனைத்தும் ஒருமனதான முடிவுகளின்படியே எடுக்கப்பட்டவை ஆகும். நாட்டில் ஜனநாயகத்தைக் காக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைகளை முழு நேர்மையுடன்நிறைவேற்றுவதிலும் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

குற்றச்சாட்டு 1 படிவம்-6 இல் சட்டவிரோத மாற்றம்

புதிய வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு உரிய படிவம்-6 இல், இந்த ஆண்டு ஜூலையில், வாக்காளர் அல்லது அவரது பெற்றோர்/பாட்டன் -பாட்டி ‘கடந்த வாக்காளர் பட்டியலில்’ இருக்கிறார்களா என்ற புதிய கேள்வி சேர்க்கப்பட்டது. இதற்குபதிலளிக்காமல் விண்ணப்பமே நிரப்ப முடியாது. அரசு விதிகளில் திருத்தம் செய்யாமல் இதுபோன்ற கேள்விகளைபடிவத்தில் இணைக்க முடியாதுஎன்று மே மாதமே ஜோஷி எழுத்துப்பூர்வமாக எச்சரித்துள்ளார். சாந்துவும் இதையே கூறியுள்ளார். ஆனாலும்இந்த மாற்றம் நடைமுறைப்படுத் தப்பட்டு உள்ளது. இது “உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என ஆகஸ்ட் 13 அன்றுசாந்து மீண்டும் சொன்ன போதிலும், அந்தக் கேள்வி அகற்றப் படவே இல்லை.

குற்றச்சாட்டு 2தொகுதி அதிகாரிகளின் அதிகாரம் பறிப்பு

பரவலாக்கப்பட்ட நிர்வாகமே தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கான அடிப்படை உத்தரவாதம்.வாக்காளர் பட்டியலைத்தயாரிக்கும் அதிகாரம் சட்டப்படிஅந்தந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு மட்டுமேஉள்ளது. ஆனால் தில்லியில் உள்ள ஐடி பிரிவு மூலம் இத்தரவுகள் மையப்கடுத்தப்படுவதாகவும், வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் தேர்தல் ஆணை யர்கள் 2பேரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

குற்றச்சாட்டு 3 மேற்குவங்கத்தில் அனுமதியின்றி மேல்முறையீடு

மேற்குவங்கத்தில் 60 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையை தீர்மானிக்கும் அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பறித்து நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதில் 27 லட்சம் வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியது. பின்னர், இந்த முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயங்களை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பாயங்களில் 38 லட்சம் மேல்முறையீடுகள் தற்போது நிலுவையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அவற்றில் 22.21 லட்சம் படிவங்கள், நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீடுகள் ஆகும். 16.10 லட்சம் மேல்முறையீடுகளானது நீதித்துறை அதிகாரிகளால் வாக்காளர்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள். இதில், இந்த 16.10 லட்சம் மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தது யார் என்பதைதேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லைஇதனைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி பெற்று மேல்முறையீடு செய்தது யார் என சுக்பீர் சிங் சந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றச்சாட்டு 4 கோவாவில் தகுதியான வாக்காளர்கள் நீக்கம்

இறுதிப்படுத்தப்படாத வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை பாதுகாத்துக்கொள்ள ஆவணங்கள் சமர்ப்பித்து விசாரணைக்கு உட்படும் வாய்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. இதனையடுத்து, கோவாவில் தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரிகள் 97 வாக்காளர்களை தகுதியானவர்கள் என அறிவித்தனர். ஆனால் அந்த முடிவைப்பதிவேற்றுவதற்கு மென்பொருளில் வழி முறைகள் இல்லை.நீக்கங்களை திரும்பப்பெறும் வசதிக்காக கோவா தேர்தல் அலுவலகம் 8 முறை மூத்த அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியும், காலக்கெடு நெருங்கும் வரை மேலிருந்துபதில் வராததால்அந்த வசதி உருவாக்கப் படவே இல்லை. இதனால் தகுதியான அந்த வாக்காளர்கள் இறுதிபட்டியலில் இடம்பெறாமல் போயினர்.

“ஒருமனதாக நடத்தப்பட வேண்டும்”

அரசியலமைப்பின் 324-ஆவது பிரிவின் கீழ் அமைந்த இந்திய தேர்தல் ஆணையத்தில், தலைமை ஆணையரும்இரு ஆணையர்களும் தரவரிசையில் சமமானவர்கள் தான். தலைமை தேர்தல் ஆணையர், “அந்த மூவரில் முதன்மையானவர்” மட்டுமே. தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கில்லை. 2023 சட்டப் பிரிவு 18-இன் படி, ஆணையத்தின் அனைத்துப் பணிகளும் “இயன்றவரை ஒருமனதாக நடத்தப்பட வேண்டும்”; கருத்துவேறுபாடு ஏற்பட்டால் “பெரும்பான்மையினரின் கருத்துப்படி” மட்டுமே தீர்மானிக்க வேண்டும். ஆனால் தேர்தல்ஆணையத்தின் பெயரில் பல அறிவிப்புகள் ஆணையத்தின் ஒப்புதல் இன்றியே வெளியிடப்படுகின்றன” என சாந்தும், ஜோஷியும் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு ஏப்ரல் 16 அன்றுஎழுத்துப்பூர்வமாக எச்சரித்துள்ளனர்.

அதாவது கூட்டு முடிவை அமலாக்கம் செய்யாமல் பாஜகவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, வாக்காளர்களின் வாக்கு உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் அதனை கடுமையான நடைமுறைகளாக மாற்றுவது, தகுதியான வாக்குகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகளையே உருவாக்குவது எனஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி நீக்கப்பட வேண்டும் : சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) நடவடிக்கையின் போது தேர்தல் ஆணையத்தின் பல முடிவுகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, ‘எஸ்ஐஆர்’ நடைமுறையை உடனடியாகநிறுத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரமானது, சிறப்புத் தீவிரத் திருத்த நடைமுறையை மட்டுமல்லாமல், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) நேர்மையின் மீதே கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. எஸ்ஐஆர் நடைமுறை தொடங்கப்பட்டதில் இருந்தே சிபிஐ(எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தொடர்ந்து எழுப்பி வரும் சந்தேகங்களையும் கவலைகளையும் இந்த சம்பவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதெரிவித்துள்ளது.