வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த விவகாரம் விசாரணைக்கு உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்
17 May 2026, 8:43 pm

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த விவகாரம் விசாரணைக்கு உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை, மே 17- நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற வர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக எழுந்த புகார் குறித்து இந்திய தேர்தல் ஆணை யம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் முடிவடைந்த நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்த 25 பேரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இவர்களில் பெரும்பா லோர் பிரிட்டிஷ், கனடா மற்றும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்களின் ஆள்காட்டி விரல்களில் வாக்களித்ததற்கான மை வைக்கப் பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

அவர்கள் வெளிநாடுகளுக்குச் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் சட்ட அம லாக்கத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. அத்துடன், தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து இதுவரை வெளிநாடுகளுக்குத் திரும்பாத வர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் குடிவரவுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது தேர்தல் நடை முறையின் குறைபாடுகளைக் காட்டுவதாக வும், குடிவரவுத் தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இச்சூழ லில் தேர்தல் ஆணையத்தின் விசாரணை உத்தரவை அவர் வரவேற்றுள்ளார். இது குறித்துப் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை சரிபார்ப்புகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பிற்கு விட்டுவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.