தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

22 Mar 2026, 4:19 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சருடன் ப.சிதம்பரம் சந்திப்பு

சென்னை: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு இழு பறியை முடிவுக்கு கொண்டு வர, மூத்த காங்கிரஸ் தலை வர் ப.சிதம்பரம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, புதுச்சே ரியில் வேட்புமனுத் தாக்கல் திங்கட்கிழமை நிறைவடைவதை யொட்டி, இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேசிய ஜன நாயக கூட்டணி ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டை இறுதி  செய்திருக்கும் நிலையில், காங்கிரஸ்-திமுக கூட்டணியில்  முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து: முதல்வர் பெருமிதம்

சென்னை: “விடியல் பயணம் திட்டம் புதிய எதிர்கா லத்தை எழுதிய முதல் கையெழுத்து” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “தமிழ் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் விடியல் பயணத் திட்டம் மார்ச் 1 வரை மொத்தம் 897.82 கோடி பயணங்களை எட்டியுள் ளது. 7,712 விடியல் பேருந்துகளில் 2021-22 ஆண்டில்  95.86 கோடி பயணங்களாக தொடங்கி, 2025-26  ஆண்டில் 235.14 கோடி பயணங்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்ட இத்திட்டம் இப்போது பிற மாநிலங்களாலும் பின்பற்றப்படுகிறது. மகளிர் மட்டுமின்றி திருநர்கள் மற்றும்  மாற்றுத் திறனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுங்கள். திமுக ஆட்சியில் இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர்  தமிழ்வாணன் காலமானார் சென்னை: தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின்

தலைவரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதி பதியுமான ச.தமிழ்வாணன் உடல்நலக்குறைவால் காலமா னார். 2005 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அவர், நீதித்து றையில் மட்டுமல்லாது சமூகநீதியிலும் ஆழ்ந்த அக்கறை  கொண்டவராகப் பாராட்டப்பட்டார். பின்னர் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று, ஆணையத்தின் பணிகளை உறுதியாக முன்னெடுத்தவர் என்றும் சமூகநீதி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் தீவிர மாக ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி: ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி 15 ஆவது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியில் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், உப்பளம் தொகுதியில் அன்பழகனும், உருளையன்பேட்டை தொகுதி யில் காந்தியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு இம்முறை 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.

விக்கிரமராஜா கண்டனம்

சென்னை: தேர்தல் அதிகாரிகள் சோதனை என்ற  பெயரில் வியாபாரிகளை துன்புறுத்துவதாக விக்கிரமராஜா  கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் மார்ச் 27 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். வியாபாரி களிடம் பணம் பறிமுதல் செய்வதை கைவிடாவிட்டால், மார்ச்  31 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும். பணம்  கொண்டு செல்வதில் வியாபாரிகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்?

சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 23 அன்று நடைபெற உள்ளது. இதில் தேர்தல்  தொடர்பாகவும், கூட்டணித் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசிக்க உள்ளார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில்  தேமுதிக இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தேமுதிகவுக் கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து திமுக-தேமுதிக பேச்சுவார்த்தைக்குப் பிறகு அறிவிக்கப்படவுள்ளது.

சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறை களை பின்பற்ற சுகாதாரத் துறை ஆணையிட்டுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவில் உயிரிழந்த பறவைகளை ஆய்வு  செய்ததில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.  முழுமையாக சமைக்கப்படாத, சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.  இறைச்சிக் கழிவுகளை பொது வெளியில் கொட்டக் கூடாது என  அறிவுறுத்தியுள்ளது.

ரூ.75 கோடி மதிப்பிலான பணம்-பொருட்கள் பறிமுதல்  தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள்  அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை ரூ.75 கோடி மதிப்பி லான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம்  முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியி லும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள்  அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக  உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது வரை  ரூ.23 கோடியே 74 லட்சம் ரொக்கப் பணம், ரூ.23 கோடியே  19 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் நகைகள், ரூ.61  லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.21 கோடியே 96 லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் தலா 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்பு குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி 2,160 பறக்கும் படைகள்  மற்றும் 2,160 கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன என தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.